Home /News /employment /

8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை... சென்னையில் ஜூலை 22-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை... சென்னையில் ஜூலை 22-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 22.072022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்தப்பட உள்ளன.

    இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழிசார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

    இம்முகாமில் 30- வயதிற்கு உட்பட்ட 8- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    ALSO READ | ZOHO நிறுவனம் 2,000 பணியாளர்களை நியமிக்கத் திட்டம்
     வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி