Home /News /employment /

இளைஞர்களே வேலை வேண்டுமா..? இன்று சென்னையில் மெகா வேலைவாய்ப்பு முகாம்...

இளைஞர்களே வேலை வேண்டுமா..? இன்று சென்னையில் மெகா வேலைவாய்ப்பு முகாம்...

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

Chennai Job Fair: தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை அனைவரும் கலந்துக்கொள்ளலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களுடன் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை இன்று நடத்த உள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்படுகிறது.

    இந்த வேலைவாய்ப்பு முகாம், ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற இருக்கிறது.இம்முகாமில் 8, 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்தின் காலி பணியிடங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Employment, Employment camp, Job Fair

    அடுத்த செய்தி