சென்னையில் வரும் 27ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னையில் வரும் 27ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பு முகாம்
Job fair in Chennai: | தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 30 வயதுக்கு உட்பட்ட 8ம் வகுப்பு , 10ம் வகுப்பு , பிளஸ்2 ,ஐடிஐ , பட்டயப்படிப்பு , கலை , அறிவியல் , மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.
சென்னையில் வரும் 27ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீர ராகவராவ் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகள் வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்படுகின்றது.
இதில் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 27ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு வளாகத்தில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 30 வயதுக்கு உட்பட்ட 8ம் வகுப்பு , 10ம் வகுப்பு , பிளஸ்2 ,ஐடிஐ , பட்டயப்படிப்பு , கலை , அறிவியல் , மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்கின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.