சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..!
வேலை வாய்ப்பு
  • News18
  • Last Updated: January 21, 2020, 9:26 AM IST
  • Share this:
சென்னையில் வரும் 24- தேதி வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இணைந்து தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தவுள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் “சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இணைந்து வரும் 24 தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளன. இதில் 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளன. சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை முகாம் நடைபெற இருக்கிறது.

இதில் 8, 10 , 12 வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவதொரு பட்டம் பெற்ற 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கு பெறலாம். மாற்றுத்திறனாளிகளும் இந்த தகுதியில் அடக்கம்.


மேலும் இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள விரும்பினால் வேலை வாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பணியாளர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
First published: January 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading