கொரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்தே பணி செய்யும் வசதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த வசதியால், பணியாளர்கள் நாளொன்றுக்கு சராசரியாக 72 நிமிடங்கள் மிச்சப்படுத்தியாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
முன்னதாக, 'National Bureau of Economic Research' என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், "வீட்டில் இருந்து பணி செய்யும் போது ஏற்படும் சேமிப்பு" (TIME SAVINGS WHEN WORKING FROM HOME) என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டனர்.
கிட்டத்தட்ட 27 நாடுகளில் இருந்து, வீட்டில் இருந்தே பணி செய்த காரணத்தினால் ஏற்படும் பயண நேரக் குறைப்பு குறித்த தரவுகளை ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதன் அடைப்படையில், 2020 மற்றும் 2021ல் சராசரியாக, வாரத்திற்கு 2 மணி நேரம் மிச்சப்படுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், வீட்டில் இருந்தே பணி செய்த இந்தியர்கள் சராசரியாக நாளொன்றுக்கு 99 நிமிடங்கள் வரை மிச்சப்படுத்தியுள்ளனர். இந்த, மிச்சப்படுத்தப்பட்ட நேரத்தை, முக்கியத்துவம் வாய்ந்த இதர பணிகளுக்கும் (47 நிமிடங்கள்) பொழுது போக்கு அம்சங்களுக்கும் (23 நிமிடங்கள்), குழந்தை வளர்ப்பிற்கும் (13 நிமிடங்கள்) செலவளித்துள்ளனர்.
மேலும், பயணக் குறைப்பால், தங்கள் வருமானத்தில் குறிப்பிட்டத் தொகையை பணியாளர்கள் சேமித்து வந்ததாகவும், வேலையளிக்கும் பெருநிறுவனங்களும் அதிக பயனடைந்தததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது, கொரோனா பெருந்தொற்று தாக்கம் குறைந்து வருவதால் வீட்டில் இருந்தே பணி செய்து வரும் வசதியை தனியார் நிறுவனங்கள் நிறுத்தி வருகின்றன. நாட்டின் உழைப்புச் சந்தையில், பெண்களின் பங்களிப்பு குறைவாக இருந்து வருகிறது. நகர்ப்புறங்களில் படித்த பெண்கள் கூட வேலைக்கு செல்ல தயக்க காட்டி வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களின் உழைப்பு பங்களிப்பை ஊக்குவிக்க 'வீட்டில் இருந்தே வேலை" செய்யும் வசதியை தனியார் நிறுவனங்ங்கள் கொண்டு வர வேண்டும் என்று உலக தொழிலாளர் ஸ்தாபானம் தொடர்ந்து கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.