ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

Tiruvallur District Job alerts: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், இதில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து  வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அதனடிப்படையில், நாளை (13.01.2023) வெள்ளிக்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி 'வழிகாட்டும் மைய வளாகத்தில் காலை  10 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பணியாட்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு தனியார்துறையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு - அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு  செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்க:  பயிற்சியை முடி! வேலையை புடி! ..... அரசின் சூப்பர் திட்டம் இதோ

First published:

Tags: Private Jobs