ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் - தொடரும் சோகம்

10,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் - தொடரும் சோகம்

மைக்ரோசாப்ட் நிறுவனம்

மைக்ரோசாப்ட் நிறுவனம்

பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் செலவீனங்களை விரிவுபடுத்திய வாடிக்கையாளர்கள், தற்போது உகந்த அளவு  மட்டுமே செலவு செய்து கூடுதல் நன்மைகளை பெற முயற்சிக்கின்றனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 வருட தொடக்கமே தொழிலநுட்ப சார்ந்த பணியாளர்களுக்கு மிகவும் சவாலான காலமாக மாறியுள்ளது. இம்மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 26 ஆயிரம் பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதாவது, நாளொன்றுக்கு சராசரியாக 1600 பேர் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், 2023-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் சுமார் 10,000 பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மைக்ரோசாஃப்ட் தலைவர்  சத்யா நாதெள்ளா தனது பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், "குறிப்பிடத்தக்க மாற்றங்களின் நேரத்தில் நாம் வாழ்கிறோம். வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களின் சந்திப்பில் சில போக்குகள் தெளிவாக உள்ளன. பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் செலவீனங்களை விரிவுப்படுத்திய வாடிக்கையாளர்கள், தற்போது உகந்த அளவு  மட்டுமே செலவு செய்து கூடுதல் நன்மைகளை பெற முயற்சிக்கின்றனர்.

உலகின் சில பகுதிகள் பொருளாதார மந்தநிலையில் உள்ளன. சில பகுதிகள் அத்தகையை நெருக்கடிகளை எதிர்நோக்கி உள்ளன.  இதன் காரணமாக, ஒவ்வொரு துறையிலும் உள்ள நிறுவனங்கள் எச்சரிக்கையுடன்  இருப்பதை நாங்கள் காண்கிறோம். அதே நேரம், உயர்தர மாதிரிகளை (Advanced Models) கணினியின் தளங்கலாக நாம் மாற்றி வருவதால், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியுடன்   அடுத்தக் கட்ட கணனி அலை பிறக்கிறது.

இந்த கருத்துருவின்  அடிப்படையில், நிர்வாகம் சில மாற்றங்களை இன்று முன்மொழிகிறது. இதன் விளைவாக, 2023-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் சுமார் 10,000 பேரை ஆட்குறைப்பு செய்யப்படுவார்கள். மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் இந்த ஆட்குறைப்பு எண்ணிக்கை வெறும் 5%க்கும் குறைவானதாகும்.  பணியாளர்களின் வாழ்வதாரங்கள் பாதிக்கப்படாமலும், நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மை வாயிலாகவும் ஆட்குறைப்பு நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்க: ஆட்குறைப்பில் இறங்கும் அமேசான் நிறுவனம்: இந்திய ஊழியர்களின் நிலை என்ன?

First published:

Tags: Microsoft