கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பு என பொருளாதார நிச்சயற்றத் தன்மை நிலவி வரும் நிலையில், உலக பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. முன்னதாக, ஆன்லைன் வர்த்தக சேவையில் கோலோச்சி வரும் அமேசான் நிறுவனம், 25,000 பணியாளர்களை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக அறிவித்தது.
இந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலையில் அமர்த்த இருப்பதாகவும், இதில் குறைந்தது 40,000 பேர் புதிதாக வேலை தேடும் இளைஞர்கள் என்றும் டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராகேஷ் கோபிநாத் இதுகுறித்து கூறுகையில், " நிறுவனத்தின் செயல்பாடுகள் ஊக்கமளிப்பதாக இருந்து வருகிறது. மனித வள திறன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முதலீடு செய்து வருவதாக தெரிவித்தார்.
இருப்பினும், கடந்த அக்டோபர் டிசம்பர் மாத காலகட்டத்தில், மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 2, 197 குறைந்திருப்பதாக தெரிவித்தார். இதற்கு, முந்தைய 18 மாதங்களில் டிசிஎஸ் நிறுவனம் அதிக எண்ணிக்கையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் விளைவாக, தற்போது ஒப்பிட்டு அளவில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதாக தெரிவித்தார்.
இதற்கிடையே , பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் முழுவிகித ஊக்கத் தொகையை ஊழியர்களுக்கு அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்க: இன்போசிஸ் Non-Compete Clause என்றால் என்ன? நடைமுறைப்படுத்த முடியுமா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IT JOBS, Tamil News