தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். அந்த வகையில் தற்போது சென்னையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வண்ணம் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் கலந்துகொண்டு தகுதியானவர்களுக்குப் பணி நியமனம் வழங்குவர். இந்த வேலைவாய்ப்பு முகாம் 20.01.2023( வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் முகவரி:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம், ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வாளகம்,
ஆலந்தூர் சாலை,
கிண்டி, சென்னை - 32.
இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப் பணியிடங்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.
மேலும் இம்முகாம் மூலம் பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைதேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.
கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்கள் விவரங்களைத் தமிழ்நாடு தனியார்த் துறை வேலைவாய்ப்பு https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Employment news, Job Fair, Private Jobs