முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / முதியவர்களுக்கு சூப்பர் வேலை: மத்திய அரசின் சூப்பர் திட்டம் இதோ!

முதியவர்களுக்கு சூப்பர் வேலை: மத்திய அரசின் சூப்பர் திட்டம் இதோ!

வேலை வாய்ப்புகளை தேடும் மூத்த குடிமக்களை வேலை வழங்குபவர்களுடன் இணைக்கும் சேக்ரட் (SACRED) இணையதளத்தை மத்திய அரசு தொடங்கியது. sacred.dosje.gov.in இதன் இணையதளம். 

வேலை வாய்ப்புகளை தேடும் மூத்த குடிமக்களை வேலை வழங்குபவர்களுடன் இணைக்கும் சேக்ரட் (SACRED) இணையதளத்தை மத்திய அரசு தொடங்கியது. sacred.dosje.gov.in இதன் இணையதளம். 

வேலை வாய்ப்புகளை தேடும் மூத்த குடிமக்களை வேலை வழங்குபவர்களுடன் இணைக்கும் சேக்ரட் (SACRED) இணையதளத்தை மத்திய அரசு தொடங்கியது. sacred.dosje.gov.in இதன் இணையதளம். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

2011 இந்திய சனத்தொகை கணக்கெடுப்பின் படி, இந்திய மக்கள் தொகையில் 8.5% பேர் (10.3 கோடி) அறுபது வயதுக்கும் மேலானவர்கள் ஆவர். 2021ல் இந்த எண்ணிக்கை 13.8 கோடியாக உள்ளது (ELDERLY in INDIA 2021). 2050ல் இந்த எண்ணக்கை 25 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், 2021ல் 1.04 கோடியாக உள்ள மூத்த குடிமக்களின் மக்கள் தொகை, 2031ல் 1.42 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. 2031ல் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், 18.2% பேர் 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் ஆவர்

இதற்கிடையே, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட நீண்ட முதுமை பற்றிய ஆய்வறிக்கையில், (Longitudinal Ageing Study of India (LASI) Wave-1) , முதியவர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஏதாவது ஒரு நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

40 சதவீதம் பேருக்கு உடல் ஊனம் உள்ளது, 20 சதவீதம் பேருக்கு மன நல சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தது.

பல்வேறு வகையான உரிமை மறுப்புகளையும், அடக்கு முறைகளையும், வாழ்க்கை பேதங்களை மூத்த குடிமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். மாநிலத்தில் முதுமை அடைந்த பெண்களில் நான்கில் ஒருவர், தனிமையில் வாழ்வாதாக கூறப்படுகிறது.மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண் முதியவர்களே தனிமையில் வாழ்வதற்கான (கணவன் அற்ற நிலை, தனித்து விடப்படல், அனாதைகளாதல்) வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது

தமிழ்நாட்டில் 60 வயதைக் கடந்த 4ல் ஒரு மூத்தக் குடிமகனும், 80 வயதைக் கடந்த 10ல் 1 மூத்தக் குடிமகனும் பல்வேறு பணிகளில் பணிபுரிந்து வரலாம் என்று மதிப்படப்படுகிறது. நகர்ப்புறங்களை விட கிராம புறங்களில் வாழும் முதியவர்கள் உழைப்பில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம், கல்வி அறிவு பெறாத, மிகவும் பிறப்படுத்தப்பட்ட/ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதியவர்களே வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், யாரும் தங்கள் சொந்த அபிப்பிராயங்கள் அடிப்படையில் வேலையில் ஈடுபடவில்லை என்பதையும் இங்கு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அரசியல், சமூக, பொருளாதார காரணங்களே இதற்கு முக்கிய காரணமாகும்.

வேலை வாய்ப்புகளை தேடும் மூத்த குடிமக்களை வேலை வழங்குபவர்களுடன் இணைக்கும் சேக்ரட் (SACRED) இணையதளத்தை மத்திய அரசு தொடங்கியது. sacred.dosje.gov.in இதன் இணையதளம்.  இந்த தளத்தில், 13.03.2023 வரை 5821 முதியவர்கள் பதிவு செய்துள்ளனர்.

முதியவர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதில், SACRED PORTALஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வேலை தேடு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மனித வளங்களை இந்த போர்ட்டலின் மூலம் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

இந்த போர்ட்டலில், மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்கச்சக்கமான வேலைவாய்ப்புகளை பட்டியலிட்டுள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த போர்ட்டலின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

First published:

Tags: Recruitment