ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

12,000 பேரை ஆட்குறைப்பு செய்யும் கூகுள் - ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை உருக்கமான கடிதம்

12,000 பேரை ஆட்குறைப்பு செய்யும் கூகுள் - ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை உருக்கமான கடிதம்

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

Google Layoff: கடந்த இரண்டு ஆண்டுகளில் வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டோம். இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில், பணியமர்த்தம் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இன்று நாம் வேறுபட்ட பொருளாதார யதார்த்தத்தை எதிர் கொண்டு வருகிறோம் - சுந்தர் பிச்சை

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

தொடர்ந்து ஏற்பட்டு வரும் வர்த்தக சரிவு காரணமாக, 12,000 பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இந்த ஆட்குறைப்பு தொடர்பாக தனது பணியாளர்களுக்கு  அவர் அனுப்பிய மின்னஞ்சலில், "  கடினமான செய்திகளை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில்  தோராயமாக 12,000 ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளோம்.  

நாங்கள் உறுதியுடன் கடினமாக உழைத்து, பணியமர்த்த விரும்பி, நம்பமுடியாத திறமை வாய்ந்த சிலரிடம் இருந்து விடை  பெறுகிறோம். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.  பணியாளர்களின் வாழ்க்கையில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என்னைப் பெரிதும் பாதிக்கிறது. இதற்கான, முழுப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டோம். இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில், பணியமர்த்தம் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இன்று நாம் வேறுபட்ட பொருளாதார யதார்த்தத்தை எதிர் கொண்டு வருகிறோம்.

இருப்பினும், நமது வலுவான கட்டமைப்பு, தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மதிப்பு, செயற்கை நுண்ணறிவு துறையில் மேற்கொள்ளப்பட்ட  ஆரம்ப கட்ட முதலீடுகள் ஆகியவற்றின் காரணமாக நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பைப் பற்றி நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் " என்று தெரிவித்தார்.   ஏறக்குறைய 25 ஆண்டைக் கடந்த கூகுள் நிறுவனம், தற்போது கடினமான பொருளாதார சுழற்சிகளை கடக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, 11,000 பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. இந்த நிறுவனமும், பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் செலவீனங்களை விரிவுபடுத்திய வாடிக்கையாளர்கள், தற்போது உகந்த அளவு  மட்டுமே செலவு செய்து கூடுதல் நன்மைகளை பெற முயற்சிக்கின்றனர். எனவே, இந்த ஆட்குறைப்பு இன்றியமையாதாகிறது என்றும் தெரிவித்தது.

First published:

Tags: Google