பொருளாதார நிச்சயாற்றத் தன்மை காரணமாக, 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஆட்குறைப்பு செய்த கூகுள் நிறுவனம், தற்போது தனது வளாகங்களில் சுத்தம் செய்வதற்காக ஈடுபடுத்தி வந்த 100க்கும் மேற்பட்ட ரோபோக்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது.
பெரும்பாலும், இன்றைய ரோபோக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட சூழல்களில், குறிப்பிட்ட பணிகளை செய்து முடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய ரோபாக்கள், அன்றாட வாழ்வில் எதிர்பாராத சூழல்களையும், அவதானிப்புகளையும் சமாளிப்பது இல்லை. இந்த சூழலில், வீடுகள், அலுவலகங்கள் போன்ற முறைப்படுத்தப்படாத மனித சூழல்களில் தன்னாட்சி முறையில் செயல்படக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் திட்டத்தை (Every day Robo Projects) கூகுள் நிறுவனம் தொடங்கியது.
இந்த திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் ரோபாக்கள், அன்றாட வாழ்வில் இருந்து கற்றுக் கொண்டு மனிதர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட ரோபோக்கள் கூகுள் நிறுவனத்திற்குள் உள்ள உணவகங்களில் பணியமர்த்தப்பட்டு வந்தது. மனிதத் தலையீடு இன்றி உணவகங்களை சுத்தம் செய்வது. குப்பைகளை தரம் பிரிப்பது போன்ற களப் பணியில் ரோபோ ஈடுபடுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், கூகுள் நிறுவனம், Every day Robo திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பணியில் இருந்து வந்த 100க்கும் மேற்பட்ட ரோபோக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த தொழில்நுட்பத்தை மாற்று முயற்சிகளில் ஈடுபடுத்த இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஆட்குறைப்பு தொடர்பாக பணியாளர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பிய மின்னஞ்சல் கடிதத்தில், " கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலத்தில், நாம் வேறுபட்ட பொருளாதார யதார்த்தத்தை எதிர் கொண்டு வருகிறோம். இருப்பினும், செயற்கை நுண்ணறிவு துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட முதலீடுகள் காரணமாக நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பைப் பற்றி நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google