நாட்டில் புதிதாக பணி நியமனம் செய்யப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது. 2023 தொடக்கத்தில் இருந்து, கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பான்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் செயல்பட்டு வரும் உள்நாட்டு பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபடவில்லை என்றாலும், அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்க முடியாமல் சுணக்கத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, 2023 பிப்ரவரி மாதத்தின் முறைசார்ந்த வேலைவாய்ப்பு கண்ணோட்டம் குறித்த செய்தி அறிக்கையை வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, 2022 டிசமபர் மாதத்தில், வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் (8,02,250) புதிய சந்தாதாரர்களாக இணைந்துள்ளனர். 2022, நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 9,37,780 ஆக இருந்த நிலையில், டிசம்பரில் கணிசமாக குறைந்துள்ளது. இதில், மிகவும் பரிதாபமாக, கவலைதரக் கூடிய வகையில், 18 வயது முதல் 25 வயது வரையிலானவர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 15% குறைந்துள்ளது. அதே சமயம், டிசம்பர் மாதத்தில் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கையில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்துள்ளது.
2022 -23 நிதியாண்டி | புது சந்தாதாரைகள் எண்ணிக்கை |
ஏப்ரல் மாதம் | 10,59,724 |
மே மாதம் | 10,47,295 |
ஜூன் மாதம் | 11,46,600 |
ஜுலை மாதம் | 11,62,227 |
ஆகஸ்ட் மாதம் | 10,56,753 |
செப்டமபர் மாதம் | 10,06,371 |
அக்டோபர் மாதம் | 7,80,170 |
நவம்பர் மாதம் | 9,37,780 |
டிசம்பர் மாதம் | 8,02,250 |
2022 நிதியாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து 10 லட்சத்திற்கும் அதிகமான புதிய சந்ததாரர்கள் சேர்க்கப்பட்ட வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முதன் முறையாக 7,80170 ஆக குறைந்தது. பின்பு நவம்பர் மாதம் 9,37,780 ஆகவும், டிசம்பர மாதம் 8,02,250 ஆகவும் குறைந்ததுள்ளது.
இந்தியாவில், 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் ரூ. 15,000க்கும் குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் வருங்கால வைப்பு நிதியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். இவர்கள் முறைசார்ந்த வேலைவாய்ப்ப்பின் கீழ் வருகின்றனர். இவர்களுக்கு தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டம், தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டம், தொழிலாளர்கள் குடும்பநல ஓய்வூதியத் திட்டம், தொழிலாளர்கள் வைப்புத் தொகையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டம் ஆகியவைகளின் கீழ் பாதுகாப்பைப் பெற்று வருகின்றனர்.
இருப்பினும், இன்று இந்திய உழைப்பாளர் படையில் உள்ள கிட்டத்தட்ட 85% பேர், இந்த திட்டங்களின் கீழ் வராத மிகவும் பாதிக்கப்படக் கூடிய முறைப்படுத்தப்படாத உழைப்பாளர்களாக உள்ளனர். எனவே, இந்த அறிக்கை முறைசார்ந்த வேலைவாய்ப்பில் ஏற்படும் போக்குகளை மட்டுமே சுட்டிக் காட்டுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு குறித்த கண்ணோட்டத்தை இது வழங்கவில்லை என்றாலும், நாட்டின் உழைப்பாளர் சந்தையின் ஒரு குறிப்பிட்ட முக்கியமான பரிணாமத்தை இது விளக்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Recruitment