Home /News /employment /

வேலைத்தேடுபவரா நீங்கள்? 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரைக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வேலைத்தேடுபவரா நீங்கள்? 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரைக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.

    தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை டிசம்பர் 3-ம் தேதி  நடக்கிறது.

    வேலைவாய்ப்பு முகாம்  : தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை ( டிசம்பர் 3-ம் தேதி) காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.

     கல்வி சான்று:

    மேற்கண்ட தகுதியுள்ள, தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 0461-2340159 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment, Tamil News, Tuticorin

    அடுத்த செய்தி