இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைதேடுபவர்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலைவாய்ப்பு இணையத்தளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும்.
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகின்றது.
இந்த முகாமில் பணி நியமனம் பெறுபவர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை தேடுபவர்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலைவாய்ப்பு இணையத்தளத்தில் https://www.tnprivatejobs.tn.gov.in/ தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். மேலும் முகாமில் கலந்து கொள்ள வருகின்ற அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். இந்த தகவலை நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் ஹரிபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.