ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இராமநாதபுரத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

இராமநாதபுரத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது.

  இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை ( ஜூன் 10 ) தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது. முகாமில் தங்களுக்கான தகுதியான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

  ALSO READ |  10, ப்ளஸ் 2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை.. விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

   ஆகவே , முகாமில்  பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் , தங்களது சுய விபர விண்ணப்பம், அசல் கல்விச் சான்றுகள் , ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மார்பளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் அன்று காலை 10 மணிக்கு பட்டினம் காத்தானில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வலகத்திற்கு வரவும். முகாமில் பங்கேற்போரின் பதிவு மூப்பு எண் ரத்து செய்யப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

  செய்தியாளர் : வீரகுமார்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy, Ramanathapuram