Home /News /employment /

சென்னை அகில இந்திய வானொலியில் செய்தி ஆசிரியர், வெப் எடிட்டர் பணி: யார் யார் விண்ணப்பிக்கலாம்?

சென்னை அகில இந்திய வானொலியில் செய்தி ஆசிரியர், வெப் எடிட்டர் பணி: யார் யார் விண்ணப்பிக்கலாம்?

அகில இந்திய வானொலி

அகில இந்திய வானொலி

Prasar Bharati : தேர்வுக்கட்டண ரசீதுடன், கல்வித்தகுதி, பிறந்த தேதி, ஆதார் எண் ஆகிய விவரங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னை அகில இந்திய வானொலியின் மாநில செய்திப்பிரிவில் பகுதி நேர ஆசிரியர் (News Editors on casual basis)  வெப் எடிட்டர் (Web Editor)  ஆகிய பணிகளில் பணியாற்ற விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும்,தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    பகுதி நேர செய்தி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இதழியலில் பட்டம் அல்லது பட்டப்படிப்பு பயின்ற 55 வயதுக்கு உட்பட்ட சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் மூன்றாண்டுகால அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழில் திறம்பட மொழி பெயர்ப்பு செய்யும் திறனும், செய்திகளை உடனுக்குடன் பதவிடும் திறனும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

    பகுதி நேர வெப் எடிட்டர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இதழியலில் பட்டம் அல்லது பட்டப்படிப்பு பயின்ற 35 வயதுக்கு உட்பட்ட சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.  சமூக வலைதளங்களில் இரண்டு ஆண்டு கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆடியோ வீடியோ எடிட்டிங்கில் திறன் பெற்றவர்களாகவும், சமூக வலைதள பக்கங்களுக்கான செய்திகளை வடிவமைப்பதில் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

    தெரிவுமுறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பம் செய்ய விரும்புவோர் ரூ.354/- தேர்வுக்கட்டணத்துடன் தங்களது  விண்ணப்பங்களை செய்திப்பிரிவு தலைவர். அகில இந்திய வானொலி, எண்.4, காமராஜர் சாலை, மயிலாப்பூர், சென்னை 600 004 என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 30, 2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  ஷெட்யூல்டு மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் ரூ.266/ தேர்வுக்கட்டணம் செலுத்தினால் போதும்.

    தேர்வுக்கட்டண ரசீதுடன், கல்வித்தகுதி, பிறந்த தேதி, ஆதார் எண் ஆகிய விவரங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட வேண்டும்.

    இதையும் வாசிக்ககுழந்தை உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

    பின்குறிப்பு: தேர்வு கட்டணங்களை www.onlinesbi.sbi/sbicollect/  என்ற இணையதளத்தில் New Casual Assignee Exam Fees என்ற பெயரில் செலுத்த வேண்டும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Job, Recruitment

    அடுத்த செய்தி