ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இன்று 13 மாவட்டங்களில் தேசிய தொழிற்பயிற்சி முகாம் : 5ஆம் வகுப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்

இன்று 13 மாவட்டங்களில் தேசிய தொழிற்பயிற்சி முகாம் : 5ஆம் வகுப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

பழகுநர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் (NCVT) மூலம் சான்றிதழ் வழங்கப்படும்.  இந்த சான்றிதழ், தொழில் தருநர்களின் அங்கீகாரமாக கருதப்படும்.

 • 1 minute read
 • Last Updated :

  நாடு முழுவதும் இன்று பிரதமரின் தேசிய தொழிற்பயிற்சி முகாம் நடைபெறுகிறது. 5 முதல் 12-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பலனடையலாம்.

  இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும், பெருநிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காகவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் சார்பாக, மாதந்தோறும் பிரதமரின் தேசிய தொழிற்பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

  இன்று ( ஜுன் 13 2022)  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

  36-க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை தருவதற்காக தொழிற்பயிற்சி முகாமில் பங்கேற்கின்றன.

  5 முதல் 12-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற சான்றிதழ், திறன் பயிற்சி சான்றிதழ், தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ பயின்றவர்கள் மற்றும் பட்டதாரிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம். வெல்டர்கள், எலக்ட்ரீஷியன், மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி முகாம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

  தமிழகத்தில் எங்கே நடத்தப்படுகிறது? 

  அறியலூர், செங்கல்பட்டு, கோயம்பத்தூர், திருவள்ளூர், ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், பெரம்பலூர், மதுரை, கடலூர், சேலம், தஞ்சாவூர் ஆகிய 13 மாவட்டங்களில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொலைபேசி எண், பயிற்சி முகாம் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட விபரங்களை https://dgt.gov.in/appmela2022/district.php?name=Tamil%20Nadu இந்த இணைப்பின் மூலம் அறியலாம்.

  பயிற்சி காலத்தை வெற்றிகரமாக முடிக்கும்  பழகுநர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் (NCVT) மூலம் சான்றிதழ் வழங்கப்படும்.  இந்த சான்றிதழ், தொழில் தருநர்களின் அங்கீகாரமாக கருதப்படும்.

  தொழிற்பழகுநர் சட்டத்தின்படி தொழிற்பழகுநர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Apprentice job