தபால் துறை தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்: மத்திய அரசு

தபால் துறை தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்று கடந்த 11-ந் தேதி பிறப்பித்த உத்தரவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 30, 2019, 10:17 AM IST
தபால் துறை தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்: மத்திய அரசு
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: July 30, 2019, 10:17 AM IST
தபால் துறை தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 14-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து திமுக எம்எல்ஏ எழிலரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தபால் துறை தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என்று ஜூன் 11-ம் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்திவைத்தனர்.


மேலும் படிக்க... இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் புலிகள்

Loading...

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...