Home /News /employment /

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி

ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான trb.tn.nic.in என்ற இணையதளம் மற்றும்  http://trb.tn.nic.in/poli2019/30072022/msg%20subject.htm என்ற இணையப் பக்கத்தில் அறிந்துகொள்ளலாம். 

    அரசின் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு தேர்வானோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே, 5 பாடங்களுக்கான பட்டியல் வெளியான நிலையில், தற்போது 10 பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியாகியுள்ளது.

    2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசு பல்டெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் 2021 டிசம்பர் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரையில் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

    மேலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் கல்வித்தகுதி சான்றிதழ்,பணி அனுபவம் சான்றிதழ் தொடர்பான கூடுதல் ஆவணங்களை 2022 மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரையில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    பாலிடெக்னிக் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் அடிப்படையில் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு  கடந்த ஜூலை 22ம் தேதி 5 பாடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது, மீதமுள்ள 10 பாடங்களில்  தேர்ச்சி பெற்றுள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதையும் படிக்க: சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு; 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

    கணிதம் ஆங்கிலம் இயற்பியல் , வேதியியல், EEE, ECE, மெக்கானிக்கல் , சிவில், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட விரிவுரையாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான trb.tn.nic.in என்ற இணையதளம் மற்றும்  http://trb.tn.nic.in/poli2019/30072022/msg%20subject.htm என்ற இணையப் பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Employment, Jobs

    அடுத்த செய்தி