ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பகுதிநேர விரிவுரையாளர்களை பணியமர்த்த வேண்டாம்: கல்வி ஆணையர் உத்தரவு

பகுதிநேர விரிவுரையாளர்களை பணியமர்த்த வேண்டாம்: கல்வி ஆணையர் உத்தரவு

காட்சிப் படம்

காட்சிப் படம்

Part time guest lectures:Polytechnic Part time guest lectures:கல்லூரிகளுக்கு பகுதிநேர விரிவுரையாளர்கள் தேவைப்படுவதாக பயிலக முதல்வரால் கருதப்படும் பட்சத்தில் நெறிமுறைகளை பின்பற்றி பணியமர்த்திக் கொள்ளலாம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலங்களில் காலியாக உள்ள விரிவுரையர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால். கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து பகுதிநேர  விரிவுரையாளர்கள் மற்றும் முழுநேர தொகுப்பூதிய விரிவுரையளார்களை பணியமர்த்த வேண்டாம் என்று அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கும்  தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார்.

  முன்னதாக, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாக கவுரவ விரிவுரையாளர்களைப் பணியமர்த்தி கொள்ள அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டிருந்தது, இந்நிலையில், 27.11.2019 அன்று  விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த ஜுலை மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து, உத்தேச தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டது.

  இந்நிலையில், ஏற்கனவே கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து பகுதிநேர  விரிவுரையாளர்கள் மற்றும் முழுநேர தொகுப்பூதிய விரிவுரையளார்களை 2022, அக்டோபர் 1ம் தேதியில் இருந்து பணியமர்த்த வேண்டாம் என்று தொழில் நுட்ப கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

  இதையும் வாசிக்க: புதிதாக தொழிமுனைவோர் கவனத்திற்கு... ரூ.1.5 கோடி வரை அரசு மானியம்

  மேலும் கல்லூரிகளுக்கு பகுதிநேர விரிவுரையாளர்கள் தேவைப்படுவதாக பயிலக முதல்வரால் கருதப்படும் பட்சத்தில் ஆணையகம் வெளியிட்ட நெறிமுறைகளை பின்பற்றி உரிய கருத்துருவினை இயக்கத்திற்கு அனுப்புமாறும், ஆணையரின் ஒப்புதல் பெற்ற பின்னர் பகுதிநேர விரிவுரையாளர்களை பணியமர்த்துமாறும் தெரிவித்துள்ளார்.

  Published by:Salanraj R
  First published: