Home /News /employment /

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை ... ரூ.70,000 வரை சம்பளம் - விவரம் இங்கே

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை ... ரூ.70,000 வரை சம்பளம் - விவரம் இங்கே

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

PNB Recruitment 2022 : மேற்கண்ட பணிகளுக்கு வயது வரம்பு 01.07.2022 தேதியின்படி 21-லிருந்து 35-க்குள் இருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi | Chennai | Tamil Nadu
    வங்கி வேலை தேடுவோருக்கு நல்வாய்ப்பாக புது டெல்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆபீசர் மற்றும் மேனேஜர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரங்கள் : 























































    வங்கியின் பெயர்பஞ்சாப் நேஷனல் வங்கி
    பணியின் பெயர்

    Officer (Fire - Safety)

    Manager (Security)
    காலியிடங்கள்:

    Officer (Fire - Safety) - 23 காலியிடங்கள் (SC-3, ST-1, OBC-6, EWS-2, UR-11)

    Manager (Security) - 80 காலியிடங்கள் (SC-12, ST-6, OBC-21, EWS-8, UR-33)
    சம்பள விகிதம்ரூ.36,000 - 63,840
    கல்வித்தகுதிFire Technology / Fire En gineering/Safety and Fire Engineering B.E./B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    பணியின் பெயர்Manager (Security) காலியிடங்கள்: 80 (SC-12, ST-6, OBC-21, EWS-8, UR-33)
    சம்பள விகிதம்ரூ.48,170 - 69,810.
    கல்வித்தகுதிஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    வயது வரம்புமேற்கண்ட பணிகளுக்கு வயது வரம்பு 01.07.2022 தேதியின்படி 21-லிருந்து 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் சலுகை அளிக்கப்படும்.
    தேர்ந்தெடுக்கப்படும் முறை

    தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

    எழுத்துத் தேர்வில் தலா 2 மதிப்பெண்கள் கொண்ட 50 கேள்விகள் இருக்கும். தேர்வின் காலம் 60 நிமிடங்கள் மற்றும் அதிகபட்ச மதிப்பெண்கள் 100 ஆகும். தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்களும் இருக்கும், தவறான பதிலுக்கு 1/4 மதிப்பெண் கழிக்கப்படும்.
    விண்ணப்பக் கட்டணம்பொது மற்றும் OBC பிரிவினர்களுக்கு ரூ.1003/-, SC/ST/PWD பிரிவினர்களுக்கு ரூ.59/-. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
    விண்ணப்பிக்கும் முறைwww.pnbindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து, அதைப் பூர்த்திச் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின்
    நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து 30.08.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி30.08.2022 தேதி கடைசி தேதி

    அறிவிப்பினை படிக்க

    https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=ft8a1nftpaUyYqYPqlOuDg==

    இந்த பக்கத்தை காணவும்.

    விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த எளிமையான வழிகளை கையாளலாம் :

    படி 1: முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.pnbindia.in ஐ  பார்வையிடவும்.
    படி 2: இணையதள பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள Whats New என்பதில் அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் உள்ளது.


    படி 3: இப்போது விண்ணப்ப  படிவத்தை இங்கிருந்து பதிவிறக்கவும்.
    படி 4: விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
    படி 5: இப்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் அனுப்பவும்.

    தேவையான சான்றிதழ் அனுப்ப வேண்டிய முகவரி :  Chief Manager (Recruitment Section), Division, Punjab National Bank, Corporate Office, Plot No.4, Sector 10, dwarka , news delhi - 110075
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி