ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

71 ஆயிரம் பேருக்கு வேலைக்கான பணி ஆணை : பிரதமர் மோடி வழங்கினார்!

71 ஆயிரம் பேருக்கு வேலைக்கான பணி ஆணை : பிரதமர் மோடி வழங்கினார்!

பிரதமர் மோடி பணி ஆணைகளை வழங்கினார்

பிரதமர் மோடி பணி ஆணைகளை வழங்கினார்

வேலை வாய்ப்பு விழாவின் கீழ், புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட 71,000 பேருக்குப் பணி ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் வழங்கினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் கீழ் இரண்டாவது வேலை வாய்ப்பு வழங்கும் விழாவின், புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட 71,000 பேருக்குப் பிரதமர் நரேந்திர மோடி பணி ஆணைகளைக் காணொலி மூலம் வழங்கினார். மேலும் புதிதாக பணிநியமனம் செய்யப்பட்டவர்களுக்குப் பயிற்சி வகுப்புகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

  ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ், அக்டோபர் மாதம் 75,000-க்கும் அதிகமான புதிய பணியாளர்களுக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. அப்பணிகளுக்கான பணி ஆணையைச் சென்னை உட்பட நாடு முழுவதும் 45 இடங்களில் (குஜராத், இமாச்சலப்பிரதேசம் தவிர) நேரடியாக இன்று வழங்கப்பட்டன. இத்துடன் . ஏற்கனவே பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் தவிர, ஆசிரியர்கள், செவிலியர்கள், விரிவுரையாளர்கள், செவிலி அதிகாரிகள், மருத்துவர்கள், மருந்தாளர்கள், ரேடியோ கிராபர்கள், துணை மருத்துவம் மற்றும் இதர தொழில்நுட்ப பணிகளுக்கும் புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட பல்வேறு மத்திய ஆயுதப் போலீஸ்படைப்பிரிவுகளில் கணிசமான எண்ணிக்கையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

  ஆன்லைன் பயிற்சி வகுப்புகளையும் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், இந்த திட்டத்தில் படி வேலை வழங்கப்பட்ட இளைஞர்களினால் தேச முன்னேற்றம் பெரும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய பிரதமர், மேக் இன் இந்தியா அல்லது வோக்கல் ஃபார் லோக்கல் போன்ற திட்டங்கள் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் போன்றவற்றை உருவாக்குகிறது என்று கூறியுள்ளார்.

  உற்பத்தி இணைப்பு முயற்சி (PLI)திட்டத்தில் மூலம் மேலும் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

  Also Read : 15 பைசாவிற்கு குளிர்பானம் கொடுத்த ரஸ்னா நிறுவனர் அரீஸ் பிரோஜ்ஷாவ் கம்பட்டா காலமானார்!

  தற்போது தொடங்கியுள்ள ஆன்லைன் பயிற்சி மூலம்

  அரசுப் பணியாளர்களுக்கான நடத்தை விதிமுறைகள், பணியிட மரபுகள், நேர்மை, மனித வள கொள்கைகள், இதர பயன்கள் மற்றும் படிகள் ஆகியவை கற்றுக்கொள்ள முடியும். புதிய பணியாளர்கள் கொள்கைகள் குறித்து அறிந்துகொண்டு தங்களது பணிகளைச் சுமுகமாகச் செய்ய இது உதவும். மேலும் அறிவு, திறன்களை வளர்த்துக்கொள்ள igotkarmayogi.gov.in என்ற இணையதளத்தை அணுகி இதர பயிற்சி வகுப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, PM Modi