இந்திய விண்வெளி துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (Physical Research Laboratory) உதவியாளர், தனி உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள்: 17
உதவியாளர் பணி: 11
தனி உதவியாளர்: 6
கல்வித்தகுதி:
உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேலாண்மை, அறிவியல், வணிகம் உள்ளிட்ட பாடநெறிகளில் ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தனிஉதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மேலாண்மை, அறிவியல், வணிகம் , கணினி அறிவியல் உள்ளிட்ட பாட நெறிகளில் ஏதாவது ஒன்றில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நிமிடத்திற்கு 80 ஆங்கில வார்த்தைகள் தட்டச்சு செய்யத் தெரிய வேண்டும். கணினி அறிவு இருந்தால் நல்லது.
வயது வரம்பு:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01/10/2022 அன்று 26-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிமுறைகள் பின்பற்றப்படும்.
ஊதியம் :
சம்பள ஏற்ற நிலை - 4; மாத ஊதியம் வழங்கப்படும். ரூ25,500 – ரூ.81,100/-
எப்படி விண்ணபிக்கலாம் ?
இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிகலாம். https://www.prl.res.in/prl-eng/ என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், ஆட்சேபணை சான்றிதழ் (NOC certificate), சாதி சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ் உள்ளிட்டவைகளை இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஆள்சேர்ப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி :
RECRUITMENT SECTION
ROOM NO. 003
PHYSICAL RESEARCH LABORATORY
NAVRANGPURA
AHMEDABAD-380 009
விண்ணபிக்க கடைசி தேதி: 01.10.2022
தெரிவு முறை: எழுத்துத் தேர்வு, திறனறிவு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.
RECRUITMENT OF ASSISTANT AND JUNIOR PERSONAL ASSISTANT
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Recruitment