• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு


முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு

17ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், தேதியை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • Share this:
    முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. 17ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், 31ஆம் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்புஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2021-21ம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குனர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுனர் வேலை -1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண்.01/2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் அரசாணை எண். 82, நாள் 16.08.2021ன் படி தமிழ் வழி பயின்றோருக்கான சான்றிதழ் சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும் மேலும் பல்வேறு விண்ணப்பதாரர்கள் வேண்டுகோளுக்குகிணங்கவும் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை - 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 17.10.2021 லிருந்து 31.10.2021 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகின்றது என அறிவிக்கப்படுகின்றது இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: