தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு

வேலைவாய்ப்பு

விண்ணப்பங்களை வரும் மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் வழியாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    காலியாக உள்ள 2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. வரும் ஜூன் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்த தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வரும் மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் வழியாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாட வாரியான காலிப்பணியிடங்கள்

    தமிழ் – 268
    ஆங்கிலம் – 190
    கணிதவியல் – 110
    இயற்பியியல் – 94
    வேதியியல் – 177
    விலங்கியியல் – 106
    தாவரவியல் – 89
    பொருளாதாரவியல் – 287
    வணிகவியல் – 310
    வரலாறு – 112
    புவியியல் – 12
    அரசியல் அறிவியியல் – 14
    வீட்டு அறிவியியல் – 3
    இந்திய கலாச்சாரம் – 3
    உயிர் வேதியியல் – 1
    உடற்கல்வி இயக்குநர் தரம் I – 39
    கணினி பயிற்றுவிப்பாளர் தரம் I – 39

    விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே வழங்கப்பட உள்ளன. தேர்வுக் கட்டணம் ரூபாய்.500 ஐ ஆன்லைன் நெட் பேங்கிங் / கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம். ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பதால் சேவைக் கட்டணமும் செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தேர்வாளர்களுக்கு ரூபாய்.250 மட்டுமே தேர்வுக் கட்டணம்.
    இதுதொடர்பான கூடுதல் விபரங்களைத் தெரிந்துகொள்ள http://trb.tn.nic.in என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
    Published by:Ram Sankar
    First published: