அரசு குழந்தைகள் காப்பகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..

கோப்புப் படம்

அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ஆற்றுபடுத்துநர்கள் மூலம் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பிகள் வரவேற்கப்படுகின்றன

 • Share this:
  புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ஆற்றுபடுத்துநர்கள் மூலம் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பிகள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கான காலிப்பணியிடம், கல்வித் தகுதி, மற்றும் மதிப்பூதியம் கீழ்காணுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  நிறுவனம் புதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம். (Pudukkottai Child Protection Office)
  பணி தமிழக அரசு வேலை
  கல்வித் தகுதி உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


   

  மதிப்பூதியம்
  ஒரு அமர்விற்கு ரூ.1000 வீதம் அதிகபட்சமாக ஒரு நபருக்கு மாதம் 5 அமர்வுகள்
  பணியிடங்கள் 3 பணியிடங்கள் ( ஒருவர் பெண் பணியாளராக இருத்தல் வேண்டும் )
  தேர்வு செய்யப்படும் முறை நேரடித் தேர்வு
  விண்ணப்ப கட்டணம் கிடையாது

  விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து புதுக்கோட்டை மாவட்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை

  கண்காணிப்பாளர்,
  அன்னை சத்யா அம்மையார் அரசினர் குழந்தைகள் காப்பகம் ,
  44 c, சின்னப்பா நகர், புதுக்கோட்டை - 622001

  என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 15.02.2021 ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

  15.02.2021 ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

  தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04322 221233 / 9659976829

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண அதிகாரபூர்வ வலைத்தள பக்கத்தை அணுகுங்கள்  https://pudukkottai.nic.in/ta/

   
  Published by:Sankaravadivoo G
  First published: