உலகின் முன்னணி தொழிநுட்ப சேவை நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிந்தைய காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி, உக்ரைன்- ரஷ்யா படையெடுப்பு, மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கம் முதலானவை இந்த ஆட்குறைப்பிற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
இந்தாண்டில் மட்டும், கிட்டத்தட்ட 850 நிறுவனங்கள் மேற்கொண்ட ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக 1.3 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ளதாக layoffs.fyi என்ற ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி காலத்தை நோக்கி உலக நாடுகள் செல்கிறதா? என்ற அடிப்படையான கேள்வி பொது மக்கள் மனதில் எழத்தொடங்கியுள்ளது.
Payroll Reporting:
இந்நிலையில், மத்திய அரசின் தேசிய புள்ளி விவர அலுவலகம் நாட்டின் முறைசார்ந்த வேலைவாய்ப்பு கண்ணோட்டம் குறித்த செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO), தொழிலாளர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் (ESI), புதிய ஓய்வூதிய திட்டம் (NPS) ஆகிய மூன்று திட்டங்களின் சந்தாதாரர்கள் சேர்க்கை அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: இன்று இந்திய உழைப்பாளர் படையில் உள்ள கிட்டத்தட்ட 90% பேர், இந்த மூன்று திட்டங்களின் கீழ் வராத மிகவும் பாதிக்கப்படக் கூடிய முறைப்படுத்தப்படாத உழைப்பாளர்களாக உள்ளனர். எனவே, இந்த அறிக்கை முறைசார்ந்த வேலைவாய்ப்பில் ஏற்படும் போக்குகளை மட்டுமே சுட்டிக் காட்டுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு குறித்த கண்ணோட்டத்தை இது வழங்கவில்லை என்றாலும், நாட்டின் உழைப்பாளர் சந்தையின் ஒரு குறிப்பிட்ட முக்கியமான பரிணாமத்தை இது விளக்குகிறது.
தரவுகள் சொல்வது என்ன?
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும், ஒட்டுமொத்தமாக (Net payroll) 16.82 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில், 1.8 லட்சம் சந்தாதாரர்கள் அதிகமாக உள்ளது.
இருப்பினும், இந்த 16.8 லட்சம் சந்தாதாரர்களின் 9.3 லட்சம் பேர் மட்டுமே முதல் முறையாக இ.பி.எஃப்.ஓ-வில் இணைந்த புதிய உறுப்பினர்கள்.
இந்த புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த 2 மாதங்களாக குறைந்தது வருகிறது. கடந்த ஜுலை மாதம் புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 11.4 லட்சமாக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 10.2 லட்சமாக குறைந்தன. இந்த எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதத்தில் 9.3 லட்சமாக மேலும் குறைந்த்துள்ளது.
இதில், மிகவும் பரிதாபமாக, கவலைதரக் கூடிய வகையில் இருப்பது, 18 வயது முதல் 25 வயது வரையிலானவர்களின் எண்ணிக்கையயும், குறிப்பாக பெண் உழைப்பாளர்களின் எண்ணிக்கையும் உள்ளன.
கடந்த செப்டம்பர் மாதத்தில், 18-25 வயது வரையிலானவர்களின் புதிய சந்தாதார்களின் எண்ணிக்கை 5,48,567 ஆகும். இது, அதற்கு முந்தைய மாதத்தை விட எண்ணிக்கை 46,414 குறைவாகும் (8.7% குறைவு). இதில், குறிப்பாக பெண்களின் எண்ணிக்கையே கணிசமாக குறைந்து காணப்படுகிறது.
மேலும், ஜுலை மாதத்தில் சுமார் 9 லட்சம் சந்தாதாரர்கள், அமைப்பில் இருந்து வெளியேறியுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் 6.5 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். ஆனால், செப்டம்பர் மாதத்தில் வெறும் 3.3 லட்சம் பேர் மட்டுமே வெளியியேறியுள்ளனர். மறைமுக பொருளாதார நெருக்கடியை உணர்ந்து, பெரும்பாலான தொழிலாளர்கள் வேறு நிறுவனத்தில் இணையாமல் தங்களது தற்காலத்து பணியைத் தொடர்கின்றனரா? என்ற கேள்வியும் எழுகிறது.
இதையும் வாசிக்க: கட்டணம் இல்லாமல் மைக்ரோசாப்ட் சான்றிதழ் படிப்புகளை படிக்க வேண்டும் - அரசின் அசத்தல் திட்டம்!
பாலினம்: ஆண்களுடன் சமத்துவமான நிலையில் பெண்களை உழைப்பாளர் படையில் இந்திய பொருளாதாரம் சேர்த்துக் கொள்வதில்லை என்பதும் விளங்க முடிகிறது. செப்டம்பர் மாதத்தின் புதிய சந்தாதார்க்ளில் கிட்டத்தட்ட 73% பேர் ஆண் தொழிலாளர்களாவே உள்ளனர். இந்த விகிதம் முந்தைய மாதத்தை விட அதிகமாகும்.
இதையும் வாசிக்க: சொந்த முயற்சியில் தரமான ரெஸ்யூம் தயார் செய்வது எப்படி?
கொரோனா பெருந்தொற்று நெருக்கடி காலாத்தில் , வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதி காரணமாக பல பெண்கள் தொழிலார்கள் சந்தையில் நுழைந்தனர். ஆனால், தற்போது நேரடியாக அலுவலங்களுக்கு வர நிர்பந்திப்பப்பதால், பெண்கள் தற்போது தொழிலாளர் சந்தையில் மீண்டும் வெளியேற தொடங்கியுள்ளனரா என்ற கேள்வியும் எழுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Recruitment