Home /News /employment /

பழனி திருக்கோயிலில் மருந்தாளுனர் பணி: விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ

பழனி திருக்கோயிலில் மருந்தாளுனர் பணி: விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ

இப்பணிக்கு விண்ணப்பிக்க சித்த மருத்துவத்தில்  பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க சித்த மருத்துவத்தில்  பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க சித்த மருத்துவத்தில்  பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

    Palanimurugan Hrce:  பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மருந்தாளுனர் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சித்த மருத்துவத்தில்  பட்டயப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 















    பணியிடத்தின் பெயர்ஒப்பந்தம் ஊதியம் மாதம் ஒன்றுக்குகாலியிடம்கல்வி தகுதி
    மருந்தாளுனர் (சித்தா)ரூ. 150003சித்த மருத்துவத்தில்  பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும் (தமிழ்நாடு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது)

    முக்கியமான நாட்கள்: 08.07.2022 மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 

    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: 

    இணை ஆணையர்/செயல் அலுவலர் 

    அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், 

    பழனி - 624601

    திண்டுக்கல் மாவட்டம்.    

    நிபந்தனைகள்‌ :

    விண்ணப்பதார் இந்து மதத்தை சார்ந்தவராகவும். தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்கவேண்டும்.

    விண்ணப்பதார் மே 2022ம் மாதம் முதல் தேதியன்று 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

    விண்ணப்பதார் உடல் ஆரோக்கியம் உடையவராக இருக்க வேண்டும்.

    இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கான பணியாணை ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும்.

    இப்பணியானது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் என்பதால் இப்பணியினை மேற்கோள்காட்டி இத்திருக்கோயில் பணி நியமனங்களில் எவ்வித முன்னுரிமையும் கோரக்கூடாது.

    பணியாணை பெறப்பட்ட நபர் ரூ.100/-க்கான ஒப்பந்தப்பத்திரத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டு பணி ஏற்பு செய்ய வேண்டும்.

    நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசு பணியில் இருந்தும், பொது ஸ்தாபணத்தில் இருந்தும், இதர திருக்கோயில்களிலிருந்தும் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இத்திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், அவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோர் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

    விண்ணப்பதாரர் நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும். இதற்குத் தகுதி பெற்ற அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazelled Officer) பெறப்பட்ட நன்னடத்தை சான்று நகலினை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    போலி செய்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம்: அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை

    இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும், 08.07.2022 தேதி மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படமாட்டாது.

    விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்

    விண்ணப்பதாரர் விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் மற்றும் கைபேசி எண் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

    வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும்.

    நேர்முக தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரருக்கு பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டது.

    சமூகத்தின் அன்றாட பிரச்சனைகளைத் தீர்க்க ஆர்வமா? ரூ.1 கோடி வரை மானியம்

    நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் நபரை / நபர்களை எவ்வித காரணங்களும் கூறாது நிராகரிக்க திருக்கோயில் நிவோகத்திற்கு உரிமை உண்டு

    தேர்வு செய்யப்படும் நபருக்கு சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளரின் அங்கீகாரத்திற்கு பின்பே பணி ஆணை வழங்கப்படும்.

    விண்ணப்பதாரர் விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அணைத்து சான்றிதழ்களும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (gazetted Officer) சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது.

    விண்ணப்பதாரர் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கும் போது எடுத்து வர வேண்டும்.

    விண்ணப்படிவத்தில் விண்ணப்பதார்கள் புகைப்படம் ஒட்டப்பட்டு அதில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் மேலொப்பம் பெறப்பட வேண்டும்.

    விண்ணப்படிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை இத்திருக்கோவில் அலுவலகத்தில் நேரிலும், https://palanimurugan.hrce.tn.gov.in/, https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற திருக்கோயில் இணையத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்

     
    Published by:Salanraj R
    First published:

    Tags: Palani

    அடுத்த செய்தி