துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள சுமார் 61,000 பணியிடங்கள்

துணை ராணுவப் படைகளில் சுமார் 61,000 பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள சுமார் 61,000 பணியிடங்கள்
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 22, 2018, 5:48 PM IST
  • Share this:
நாட்டின் துணை ராணுவப் படைகளில் சுமார் 61,000 பணியிடங்கள் காலியாக இருப்பது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

எல்லை பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) உள்ளிட்ட மத்திய துணை ராணுவப் படைகளில் சுமார் 10 லட்சம் வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் படை பிரிவுகளில் தற்போது சுமார் 61,000 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரியொருவர் கூறியதாவது: நாடு முழுவதும் துணை ராணுவப் படைகளில் சுமார் 61,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஓய்வு, ராஜிநாமா, மரணம் உள்ளிட்ட காரணங்களால் காலிப் பணியிடங்கள் உருவாகின்றன. இவை நேரடி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்டவை மூலம் நிரப்பப்படுகின்றன.


கடந்த மார்ச் 1 நிலவரப்படி நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப்-ல் 18,460 பணியிடங்கள் காலியாக உள்ளன. எல்லை பாதுகாப்புப் படையில் 10,738 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல் சகஸ்திர சீமாபால் பிரிவில் 18,942 பணியிடங்களும், இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையில் 5,786 பணியிடங்களும், அசாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவில் 3,840 பணியிடங்களும் காலியாக உள்ளன. இவை விரைவில் நிரப்பப்பட உள்ளன என்றார் அந்த அதிகாரி.
First published: October 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading