முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / NCS போர்ட்டலில் கொட்டி கிடைக்கும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் - மத்திய அரசு தகவல்!

NCS போர்ட்டலில் கொட்டி கிடைக்கும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் - மத்திய அரசு தகவல்!

NCS போர்ட்டலில் கொட்டி கிடைக்கும் வேலை

NCS போர்ட்டலில் கொட்டி கிடைக்கும் வேலை

NCS Job Vacancy | e-Shram-ல் ரிஜிஸ்டர் செய்பவர்கள் NCS மூலம் ஹைகுவாலிட்டி மேனேஜ்மென்ட், அக்கவுண்டண்ட், அக்ரிகல்ச்சர் ஆபிசர் உள்ளிட்ட இன்னும் பலதரப்பட்ட வேலை வாய்ப்புகளை பெறுகின்றனர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

  • Last Updated :

நேஷனல் கேரியர் சர்வீஸ் (NCS - National Career Service) என்பது இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் இயக்கப்படும் ஒரு தொழில் சேவையாகும்.

இதனிடையே நேஷனல் கேரியர் சர்வீஸ் போர்ட்டலில் தகவல் தொழில்நுட்பம், சில்லறை வணிகம் மற்றும் கட்டுமானப் பணிகள் போன்ற துறைகளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான செயலில் உள்ள காலி பணியிடங்கள் உள்ளதாக. சமீபத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. மேலும் 26,000-க்கும் மேற்பட்ட e-Shram யூஸர்கள் NCS-ல் பதிவு செய்துள்ளதாகவும். இவ்விரு தளங்களை இணைத்ததன் மூலம் பயனடைய தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பு பற்றாக்குறைகளுக்கு மத்தியில் NCS போர்ட்டலில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் வேலை தேடுவோரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. IT மற்றும் கம்யூனிகேஷன், ஹோல்சேல் மற்றும் ரீட்டெயில், சிவில் மற்றும் கட்டுமானப் பணிகள், அரசு வேலைகள் போன்ற பல வளர்ந்து வரும் துறைகளில் எண்ணற்ற வேலைகள் குவிந்து கிடப்பதாக அரசின் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ALSO READ |  TNPSC Current affairs-6 | மத்திய அரசின் சில முக்கிய திட்டங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2022-23 பட்ஜெட் உரையில் கடன் வசதி, திறன்கள் மற்றும் ஆட்சேர்ப்பு சேவைகளை மேம்படுத்த NCS, e-Shram, UDYAM மற்றும் ASEEM ஆகிய நான்கு போரட்டல்களையும் ஒன்றிணைப்பதாக அறிவித்தார். இதில் NCS மற்றும் e-Shram ஆகிய 2 போர்ட்டல்களுக்கு இடையேயான இணைப்பு சமீபத்தில் முடிவடைந்தது. அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு (unorganised sector workers) பல சமூ பாதுகாப்புத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த மத்திய அரசு e-SHRAM போர்ட்டலை கடந்த ஆகஸ்ட் 26, 2021 அன்று அறிமுகப்படுத்தியது.

இதனிடையே இந்த இணைப்பு e-Shram போர்ட்டலில் பதிவு செய்துள்ள அமைப்புசாரா துறை ஊழியர்கள், NCS-ல் காணப்படும் உயர் வேலை வாய்ப்புகளை எளிதாக தேட உதவுகிறது. இந்த போரட்டலில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள், அரசு வேலைகள் போன்றவற்றுக்கு ஏற்ப சிறப்பு சாளரங்கள் உள்ளன. மேலும் வேலை தேடி பதிவு செய்து உள்ளவர்களுக்கு ஃப்ரீ சாஃப்ட் ஸ்கில்ஸ் மற்றும் டிஜிட்டல் ஸ்கில் ட்ரெயினிங்கையும் வழங்குகிறது.

ALSO READ | IOCL Recruitment: இந்தியன் ஆயுள் நிறுவனத்தில் 1,60,000 சம்பளத்தில் பொறியாளர் வேலை

சமீபத்தில் விஜயநகரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு புகழ்பெற்ற கெமிக்கல் நிறுவனத்தில் மாவட்ட மேலாளர் (District Manager) வேலை NCS மூலம் கிடைத்து உள்ளது. அதே போல பாலக்காட்டை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் ப்ராசஸ் எக்ஸிகியூட்டிவ் வேலை வாய்ப்பு கிடைத்தது என அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.

top videos

    e-Shram-ல் ரிஜிஸ்டர் செய்பவர்கள் NCS மூலம் ஹைகுவாலிட்டி மேனேஜ்மென்ட், அக்கவுண்டண்ட், அக்ரிகல்ச்சர் ஆபிசர் உள்ளிட்ட இன்னும் பலதரப்பட்ட வேலை வாய்ப்புகளை பெறுகின்றனர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

    First published:

    Tags: Job Vacancy