ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

குரூப்-1 பதவிக்கான தேர்வில் அசத்திய பெண்கள்.. 66 பணியிடங்களில் 57 இடங்களை பெற்றனர்

குரூப்-1 பதவிக்கான தேர்வில் அசத்திய பெண்கள்.. 66 பணியிடங்களில் 57 இடங்களை பெற்றனர்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

66 காலிப் பணியிடகளில் 57 இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர். மீதம் உள்ள இடங்களைஆண்கள் பெற்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

குரூப்-1 பதவிகளுக்கான இறுதிப்பட்டியல் வெளியான நிலையில், 66 காலிபணியிடங்களில் 57 இடங்களை பெண்களும், 9 இடங்களை ஆண்களும் தக்க வைத்துள்ளனர். துணை கலெக்டர். துணை போலீஸ் சூப்பிரண்டு, வணி கவரித்துறை உதவி ஆணையர். கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 66 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது.

இந்த பதவிகளுக்கு முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் இந்த பணியிடத்திற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டிலும் முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு இந்த ஆண்டிலும் நடத்தப்பட்டது.  மொத்தம் 3104 பேர் தேர்வை எழுதி 137 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

நேர்முகத் தேர்வு முடிவு கடந்த 15-ந்தேதி வெளியானது. முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 66 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. அவ்வாறு நிரப்பட்டு இருக்கும் இந்த 66 காலிப் பணியிடகளில் 57 இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர். மீதம் உள்ள இடங்களைஆண்கள் பெற்று இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 10 ,12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சியில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் இடம் பிடிக்கின்றனர்.

ALSO READ | சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும் தற்காலிக ஆசியர்கள் பணி; வலுக்கும் எதிர்ப்பு

அதேபோன்று சமீபத்தில் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் கூட மாணவிகளே அதிக பேர் விண்ணப்பித்திருந்தனர். இதே போல், பணி சார்ந்த துறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் பெண்களே கோலோச்சி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது குரூப்1 பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்விலும் பெண்கள் அதிக இடங்களை பெற்று முத்திரை பதித்துள்ளனர்.

First published:

Tags: Group 1, TNPSC