Home /News /employment /

தென்காசி திருமலை குமாரசுவாமி கோவிலில் ஓதுவார் வேலை... ரூ.18,500 சம்பளம் - முழு விவரம்

தென்காசி திருமலை குமாரசுவாமி கோவிலில் ஓதுவார் வேலை... ரூ.18,500 சம்பளம் - முழு விவரம்

 திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலில் வேலை

திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலில் வேலை

விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இந்து மதத்தை பின்பற்றுபவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், பண்பொழி கிராமம், அருள்மிகு திருமலைக் குமாரசுவாமி திருக்கோயிலில் காலியாகவுள்ள நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படவுள்ள கீழ்காணும் பணியிடத்திற்கு பணியாளர் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தினை சார்ந்த உரிய கல்வித்தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    திருக்கோயில் மூலம் அச்சிடப்பட்டு வழங்கப்படும் விண்ணப்பங்களை இத்திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் பெற்று முழு விபரங்களுடன் சரியாக பூர்த்தி செய்து நேரடியாகவோ தபால் மூலமாகவோ 01.08.2022 முதல் 31.08.2022 முடிய அலுவலக வேலை நாட்களில் (சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களை தவிர்த்து) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை திருக்கோயில் அலுவலகத்தில் விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும்.

    இந்த தேதிக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இதர விபரங்களை அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.















    பணியின் பெயர்கல்வித்தகுதிகாலியிடங்கள்சம்பள விவரம்
    ஓதுவார் (தேவாரம்)

    1. தமிழ் மொழியை எழுதப்படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.

    2. மாநில அரசு அங்கீகாரம் பெற்ற சமய நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப் பாடசாலை அல்லது மாநில அரசால் நடத்தப்படும் பயிலகம் ஒன்றில் தேவாரம் (ஓதுவார்) பாடத்தில் மூன்றாண்டுகள் பயின்று தேர்ச்சி பெற்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.

    3.தேவாரத்தை பண்ணுடன் பாடுவதில் வல்லமை பெற்றிருக்கு வேண்டும்.
    01ரூ.18,500 -58,600 Level-22

    நிபந்தனைகள் : 

    1.விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இந்து மதத்தை பின்பற்றுபவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

    2. திருக்கோயிலிருந்து பெறப்பட்டு முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட்ட விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத கையொப்பமிடப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    3. ஆண்கள் மட்டுமே இப்பதவிக்கு விண்ணப்பபிக்கத் தகுதியானவர் ஆவர்.

    4.விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தும் 35 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

    5.விண்ணப்பதாரர்கள் கல்வி, வயது. இனம், மதம், நன்னடத்தை சான்று மற்றும் இதர தகுதிகளுக்கான சான்றொப்பம் பெறப்பட்ட சான்று நகல் இணைக்க வேண்டும்.

    6. விண்ணப்பதாரர் மீது எந்த குற்றவியல் நடவடிக்கையும் இல்லை என்பதற்கு சான்று பெற்று அதனை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கண்டிப்பாக அசலாக சமர்ப்பிக்க வேண்டும்.

    7.நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்று பெற்ற விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    8.விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பம் பெறப்பட்ட ஒளி நகல்களாக (Copy) மட்டுமே இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது (காவல்நிலைய அலுவலரின் சான்று தவிர்த்து)

    9. தொற்றுநோய், உடல் அல்லது மனநிலை பற்றிய குறைப்பாடு உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்

    10.நீதிமன்றத்தால் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசு பணியில் இருந்தும். பொது ஸ்தாபனத்தில் இருந்தும், இதர திருக்கோயில்களிலிருந்தும் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், இத்திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், அவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

    11. இந்த வேலைவாய்ப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும் 31.08.2022 மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படமாட்டாது.

    12. ஓதுவார் பணியிடம் என்பது பகுதி நேரம் பணியல்ல. திருக்கோயில் திருநடை திறந்து, திருநடை சாற்றும் வரை திருக்கோயில் பணியில் இருக்க வேண்டும். இதை ஏற்றுக்கொள்பவர் மட்டுமே இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    13.வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் நேர்முகத்தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும்.

    14.அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கும் போது எடுத்துவரவேண்டும்.

    15.நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.

    16.நேர்முக தேர்வில் தேர்வு செய்யப்படும் நபர் சென்னை. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களின் அங்கீகாரம் பெற்ற பின்னரே பணி நியமனம் செய்யப்படுவார்.

    17.நேர்முகத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் / நபர்களை எவ்வித காரணங்களும் கூறாது நிராகரிக்க திருக்கோயில் நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.

    15. இதர விபரங்களை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில் பண்பொழி செங்கோட்டை வட்டம், தென்காசி மாவட்டம்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, Tenkasi

    அடுத்த செய்தி