தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 14% பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதியான அரசு ஆசிரியர்களைத் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான தகுதித் தேர்வில் முதல் தாள் 14.10.2022 முதல் 19.10.2022 வரை நடைபெற்றது.
கணினி வழி தேர்வாக நடைபெற்ற இந்த தேர்வில் 1,53,233 பேர் பங்கேற்றனர். இதற்கான தேர்வு முடிவுகள் 07.12.2022 அன்று ஆசிரியர் வாரியத்தில் இணையத்தளத்தில் வெளியானது. அதில் 21,543 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு : ரூ.30,000 சம்பளம்
1,53,233 பேர் எழுதிய தேர்வில் 21,543 பேர் மட்டும் தேர்ச்சி என்பது வெறும் 14% மட்டுமே. தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வின் முதல் தாளில் குறைந்த அளவிலேயே தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி அடைந்தவர்களுக்குச் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதனை 22.12.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.