இந்திய அஞ்சலகக் கட்டண வங்கியில் (Indian Post Payment Bank) காலியாக உள்ள 650 பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைகிறது. இந்திய அஞ்சல் துறையின் கிராம அஞ்சல் பணியாளர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 650
இந்திய அஞ்சலக கட்டண வங்கியானது இந்திய அஞ்சல்துறையின்கீழ், 100 சதவிகித பங்குகளுடன் இந்திய அரசுக்கு சொந்தமானதாக நிறுவப்பபட்டுள்ள வங்கியாகும். இந்தியாவில் 70 சதவிகித கிராமங்களில் வங்கி கிளை அல்லது ஏ.டி.எம் இயந்திரங்கள் இல்லாத நிலையில், இந்திய அஞ்சல் துறையின் மூலம் நம்பகமான வங்கி சேவையினை பொதுமக்களுக்கு அளிக்கும் நோக்கத்துடன் இந்த வங்கி துவங்கப்பட்டது.
இந்நிலையில், அதிகாரம் சார்ந்த (Executive) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்த வங்கி வெளியிட்டது. இந்திய அஞ்சல் துறையின் கிராம அஞ்சல் பணியாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முன்னதாக வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பில், மே மாதம் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், விண்ணப்பதாரர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசத்தை மே 27ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்படுவதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
இன்றே, கடைசி நாள் என்பதால் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பம் செய்வது எப்படி: விண்ணப்பதாரர்கள், http://www.ippbonline.com/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
ரூ.750 தேர்வுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறுதி நாளிற்குள் செலுத்த வேண்டும்.
கல்வித் தகுதி: 10, +2 கல்வி முறையில் அல்லது இதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தது, 2 ஆண்டுகள் கிராம அஞ்சல் பணியாளராக பணி செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 2022 ஏப்ரல் 30 அன்றுள்ளபடி, விண்ணப்பதாரர் 20 வயது பூர்த்தியடைந்தவராகவும்,30 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசப் பட்டியல் வெளியிடப்படும்.
இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கான பணியாணை 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும். 2 ஆண்டுகளுக்கு பின்பாக, தேர்வர்களின் செயல்திறன் அடிப்படையில், பணியானது 1 ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank, Banking jobs, Job vacancies, Post Office