Home /News /employment /

ONGC Apprenticeship: ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 3614 பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

ONGC Apprenticeship: ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 3614 பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

காட்சி படம்

காட்சி படம்

பயிற்சி காலம் : 12 மாதங்கள். பயிற்சி பெற்ற அப்ரெண்டிஸ்கள் நிரந்தர பணி நியமனத்தை கோர முடியாது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்தியாவின்  பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ஓஎன்ஜிசி) தொழிற் பழகுனர் (அப்ரெண்டிஸ்) பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளையுடன் முடிவடைகிறது.

    முன்னதாக, கணினி நிர்வாகி, எலக்ட்ரீசியன், கணக்கு நிர்வாகி, மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சியாளர்களுக்கான (அப்ரெண்டிஸ்)  ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. சென்னை வட்டத்தில் மட்டும் கணக்கு நிர்வாகி (10), அலுவலக நிர்வாகி (30),எலக்ட்ரீசியன் (5) , எலெக்ட்ரானிக் மெக்கானிக் (5) ஆகிய துறைகளில் உள்ள 50 இடங்களில் இளைஞர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    காலிப்பணியிடங்கள்: 3614

    https://apprenticeshipindia.org/, https://portal.mhrdnats.gov.in/ ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பக்க வேண்டும்.

    வயது வரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 18 -24 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், நிர்ணயிக்கப்பட்ட  வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

    பயிற்சி காலம் : 12 மாதங்கள்.

    பயிற்சி பெற்ற அப்ரெண்டிஸ்கள் நிரந்தர பணி நியமனத்தை கோர முடியாது. பயிற்சி காலத்திற்குப் பின், பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

    தெரிவு செய்யப்படும் முறை: நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதிப் பட்டியல் மே 23 அன்று அறிவிக்கப்படும்.

    சம்பளம்: தொழிற்துறை அப்ரெண்டிஸ் பணிக்கு மாத ஊதியமாக ரூ.8,050 வழங்கப்படும்.

    பட்டயப்படிப்பு அப்ரெண்டிஸ் பணிக்கு மாத ஊதியமாக ரூ.8,000 வழங்கப்படும்.

    பட்டப்படிப்பு அப்ரெண்டிஸ் பணிக்கு மாத ஊதியமாக ரூ.9000 வழங்கப்படும்.

    கல்வித்தகுதி:   எலெக்ட்ரிசியன், பிட்டர் போன்ற தொழில்துறைகளுக்கு (Trade Apprentices ) - ஐடிஐ சான்றிதழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சிவில், மெக்கானிக்கல் போன்ற பணிகளுக்கு பட்டயப் படிப்பு முடித்தவர்கள் (Diploma Apprentices) பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கணக்கு நிர்வாகி, அலுவலக நிர்வாகி போன்ற பணிகளுக்கு பட்டதாரிகள் (graduate Apprentices) விண்ணப்பிக்கலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: ONGC

    அடுத்த செய்தி