Home /News /employment /

ONGC: ஓஎன்ஜிசி-யில் வேலைவாய்ப்பு: உதவித்தொகையுடன் 3,614 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

ONGC: ஓஎன்ஜிசி-யில் வேலைவாய்ப்பு: உதவித்தொகையுடன் 3,614 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

ஓஎன்ஜிசி-யில் வேலைவாய்ப்பு

ஓஎன்ஜிசி-யில் வேலைவாய்ப்பு

ONGC Recruitment 2022 | ஓ.என்.ஜி.சி உடன் பயிற்சி பெற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ongcindia.com என்கிற நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக பொருத்தமான வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (Oil and Natural Gas Corporation Limited - ONGC) ஆனது 3,600 க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் (Apprentice) பதவிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள தொடங்கி உள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனம், இந்த வேலைவாய்ப்பு குறித்த விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளது.

    ஓஎன்ஜிசி உடன் பயிற்சி பெற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ongcindia.com என்கிற நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக பொருத்தமான வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஓஎன்ஜிசி-யில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள், 2022 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி மாலை 6 மணி ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

    ஓஎன்ஜிசி அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பின் கீழ் மொத்தம் 3614 பணியிடங்கள் நிரப்பப்பட உளள்து. இதில் நார்த்தன் செக்டாரில் 209, மும்பை செக்டாரில் 305, வெஸ்டர்ன் செக்டாரில் 1434, ஈஸ்ட் செக்டாரில் 744, சவுத் செக்டாரில் 694 மற்றும் சென்ட்ரல் செக்டாரில் 228 காலி இடங்கள் உள்ளன. ஓஎன்ஜிசி-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, குறிப்பிட்ட பணியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது மற்றும் அவைகள் பணி மையத்தின் தேவைகளின் அடிப்படையில் மாற்றத்திற்கு உட்பட்டது.

    ஓஎன்ஜிசி வேலைவாய்ப்பு 2022: தேர்வு செயல்முறை : 

    தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அப்ரண்டிஸ் தேர்வு செய்யப்படுவார்கள். மெரிட் லிஸ்டில் இதே போன்ற 'எண்கள்' இருந்தால், அதிக வயதுடைய ஒருவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    ALSO READ |  விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பணியிடங்கள் : இந்தியன் வங்கி முக்கிய அறிவிப்பு
     ஓஎன்ஜிசி வேலைவாய்ப்பு 2022: வயது மற்றும் கல்வி தகுதிகள் : 

     

    வயது: மே 15 இன் படி, மேற்குறிப்பிட்ட வேலைக்காக பதிவு செய்யும் தனிநபர்கள் குறைந்தது 18 வயது மற்றும் 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பிக்க விரும்புவார்களின் பிறந்த தேதி மே 15, 1998 முதல் மே 15, 2004 க்குள் இருக்க வேண்டும்.

    ரிசர்வ்டு கேட்டகரியில் வயது வரம்பில் சில தளர்வுகளும் இருக்கும். உச்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் ஒபிசி விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது. பிடபுள்யூபிடி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படும். (எஸ்சி/எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள் வரையும் மற்றும் ஓபிசி (கிரீமி லேயர் அல்லாத) விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டுகள் வரையும் தளர்வு வழங்கப்படும்).

    கல்விதகுதி: அனைத்து வெவ்வேறு வகையான பதவிகளுக்குமான கல்வித்தகுதி ஒன்றுக்கொன்று வேறுபட்டது. ஒஎன்ஜிசி வலைத்தளத்தில் அதுகுறித்த விரிவான தகவல்களை காணலாம். மேலும் குறிப்பிட்ட அனைத்து பதவிகளுக்குமான பயிற்சி காலம் 12 மாதங்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

    ALSO READ |  கொல்கத்தா ESI மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர் பணி: ரூ.2.30 லட்சம் வரை சம்பளம்
     ஒஎன்ஜிசி வேலைவாய்ப்பு 2022: உதவித்தொகை : 

    ஒஎன்ஜிசி-யின் கீழ் அப்ரண்டிஸ் ஆக பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7,700 முதல் ரூ.9,000 வரை வழங்கப்படும். மேலும் பயிற்சியின் போது ஏற்படும் போர்டிங் அல்லது தங்கும் செலவினங்களுக்காக ரிஎம்பெர்ஷ்மென்ட் (reimbursement ) எதுவும் கிடைக்காது. உடன் ஒஎன்ஜிசி நிறுவனம் போக்குவரத்துக்காகவும் எந்த விதமான நிதி உதவியையும் வழங்காது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, ONGC

    அடுத்த செய்தி