Home /News /employment /

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 3,598 அப்ரண்டிஸ் பணியிடங்கள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 3,598 அப்ரண்டிஸ் பணியிடங்கள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

ஓஎன்ஜிசி-யில் வேலைவாய்ப்பு

ஓஎன்ஜிசி-யில் வேலைவாய்ப்பு

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக (ஒஎன்ஜிசி) நிறுவனத்தில் அப்ரண்டிஸ் முறையிலான பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக (ஒஎன்ஜிசி) நிறுவனத்தில் அப்ரண்டிஸ் முறையிலான பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், ஆர்வமும் மிகுந்த பணி ஆர்வலர்கள் https://www.ongcindia.com/ என்ற தளத்தில் 2022 மே 15ஆம் தேதி வரையில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

    பணி நியமனம் தொடர்பான முக்கிய தேதிகள் :

    ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணி நியமனம் செய்வது தொடர்பான நடைமுறைகள் அதன் இணையதளத்திலேயே உள்ளன. 2022 ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி மே 15 மாலை 6 மணி வரை ஆகும். தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் பட்டியல் மே 23ஆம் தேதி வெளியிடப்படும்.

    மொத்த காலிப் பணியிடங்கள் :

    ஒஎன்ஜிசி நிறுவனத்தில் ஒட்டுமொத்தமாக 3,598 இடங்கள் காலியாக உள்ளன. பணி நியமனம் தொடர்பான விளம்பரம் மற்றும் அறிவிக்கையில், எந்தெந்த ஊர்களில் எவ்வளவு காலியிடம் இருக்கின்றன என்ற விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் 50 இடங்களும், காரைக்காலில் 233 இடங்களும் காலியாக உள்ளன.

    வயது தகுதி :

    இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பணி ஆர்வலர்களின் குறைந்தபட்ச வயது தகுதி 18 ஆகும். அதிகபட்ச வயது தகுதி 24 ஆகும். 2022ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி நிலவரப்படி விண்ணப்பதாரர்களின் வயது பரிசீலனை செய்யப்படும். அதாவது விண்ணப்பதாரர் 1998ஆம் ஆண்டு மே 15ஆம் தேதிக்குப் பிறகு மற்றும் 2004ஆம் ஆண்டு மே 15ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவராக இருக்க வேண்டும்.

    பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு அதிகப்பட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிக்கு 10 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளி எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 13 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. ஆனால், இவர்கள் க்ரீமி லேயர் பிரிவைச் சேராதவர்களாக இருக்க வேண்டும்.

    ஸ்டைபண்டு அளவு

    ஒன்என்ஜிசி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் அடிப்படையில் பணியில் சேர்வோருக்கு அவர்களது கல்வித் தகுதியை பொறுத்து உதவித்தொகை வழங்கப்படும். பிஏ, பிகாம், பிஎஸ்சி, பிபிஏ போன்ற கல்வி முடித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.9,000 கிடைக்கும். ஓராண்டு ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.7,700 என்ற வகையிலும், இரண்டு ஆண்டு ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.8,050 என்ற வகையிலும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.8,000 என்ற வகையிலும் உதவித்தொகை வழங்கப்படும்.

    தேர்வு நடைமுறை

    தகுதிப் பட்டியலில் உள்ள கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் மெரிட் அடிப்படையில் அப்ரண்டிஸ் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒருவேளை ஒரே மதிப்பெண் மற்றும் மெரிட் அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர் இருந்தால் அதிகபட்ச வயது உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். லாபி செய்வது, பரிந்துரை செய்வது போன்றவற்றுக்கு இடமில்லை.
    Published by:Vijay R
    First published:

    Tags: Employment, Job

    அடுத்த செய்தி