முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ONGC நிறுவனத்தில் 3614 அப்ரெண்டிஸ் பணிக்கான அறிவிப்பு வெளியானது

ONGC நிறுவனத்தில் 3614 அப்ரெண்டிஸ் பணிக்கான அறிவிப்பு வெளியானது

மாதிரி படம்

மாதிரி படம்

Jobs in ONGC: கணக்கு நிர்வாகி, அலுவலக நிர்வாகி போன்ற பணிகளுக்கு பட்டதாரிகள் (graduate Apprentices)  விண்ணப்பிக்கலாம். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கணினி நிர்வாகி, எலக்ட்ரீசியன், கணக்கு நிர்வாகி, மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்  பயிற்சியாளர்களை (அப்ரெண்டிஸ்) ஈடுபடுவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓஎன்ஜிசி) நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்: 3614

சென்னை வட்டத்தில் கணக்கு நிர்வாகி (10), அலுவலக நிர்வாகி (30),எலக்ட்ரீசியன் (5) , எலெக்ட்ரானிக் மெக்கானிக் (5) ஆகிய துறைகளில் உள்ள 50 இடங்களில் இளைஞர்கள்  பணியமர்த்தப்பட உள்ளனர்.

எலெக்ட்ரிசியன், பிட்டர் போன்ற தொழில்துறைகளுக்கு (Trade Apprentices ) - ஐடிஐ சான்றிதழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சிவில், மெக்கானிக்கல் போன்ற பணிகளுக்கு  பட்டயப் படிப்பு முடித்தவர்கள் (Diploma Apprentices) பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கணக்கு நிர்வாகி, அலுவலக நிர்வாகி போன்ற பணிகளுக்கு பட்டதாரிகள் (graduate Apprentices)  விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: 

தொழிற்துறை அப்ரெண்டிஸ் பணிக்கு மாத ஊதியமாக ரூ.8,050 வழங்கப்படும்.

பட்டயப்படிப்பு அப்ரெண்டிஸ் பணிக்கு மாத ஊதியமாக  ரூ.8,000 வழங்கப்படும்.

பட்டப்படிப்பு அப்ரெண்டிஸ் பணிக்கு மாத ஊதியமாக ரூ.9000 வழங்கப்படும்.

முக்கியமான நாட்கள்: 

அறிவிப்பு வெளியான நாள்: 2022, 27 ஏப்ரல்

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 2022 மே, 15  மாலை 6 மணி வரை.

முடிவுகள்:  2022 மே 23.

தெரிவு செய்யப்படும் முறை:  நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது வரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 18 -24 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

பயிற்சி காலம் : 12 மாதங்கள்.

பயிற்சி பெற்ற அப்ரெண்டிஸ்கள் நிரந்தர பணி நியமனத்தை கோர முடியாது. பயிற்சி காலத்திற்குப் பின், பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

விண்ணப்பத்தாரர் ஏதேனும் ஒரு பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

https://apprenticeshipindia.org/, https://portal.mhrdnats.gov.in/ ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்.

First published:

Tags: Apprentice job, ONGC