Home /News /employment /

ஓ.என்.ஜி.சி. (ONGC) நிறுவனத்தில் 422 பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?

ஓ.என்.ஜி.சி. (ONGC) நிறுவனத்தில் 422 பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?

ஓஎன்ஜிசி-இல் வேலைவாய்ப்பு!

ஓஎன்ஜிசி-இல் வேலைவாய்ப்பு!

ஒவ்வொரு பணிக்கும் வயதுவரம்பு வேறுபடுகிறது. பொதுவாக விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    நாட்டின் முன்னணி பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ஓ.என்.ஜி.சி.யின் மும்பை அலுவலகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு 422 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    பிரிவு வாரியாக: இந்த 422 பணியிடங்களில் 214 இடங்கள் அசிஸ்டென்ட் டெக்னீசியன் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு 53 இடங்களும், ஜூனியர் அசிஸ்டென்ட் டெக்னீசியன் பணிக்கு 48 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய இடங்கள் பிற பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயதுவரம்பு வேறுபடுகிறது. பொதுவாக விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

    கல்வித் தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம், கெமிக்கல், ஆட்டோமொபைல் போன்ற பிரிவுகளில் டிப்ளமா இன்ஜினியரிங் படித்தவர்கள், வேதியியல் முதுநிலைப் படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு முடித்து ஃபிட்டிங், மெஷினிங், தீயணைப்பு பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

    விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.370 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

    கடைசி தேதிவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 1, 2019. மேலும் விவரங்களுக்கு https://www.ongcindia.com/wps/wcm/connect/03fabc8f-5287-44fd-bcef-4e619aa1c94d/detailed_04mumbai.pdf?MOD=AJPERES&CVID=mu6VfWS&CONVERT என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

    Also watch

    Published by:DS Gopinath
    First published:

    Tags: Job Vacancy, ONGC

    அடுத்த செய்தி