ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பணிகளுக்கு மட்டும் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
ஓஎன்ஜிசி-இல் வேலைவாய்ப்பு!
  • News18
  • Last Updated: January 26, 2019, 6:56 PM IST
  • Share this:
இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓஎன்ஜிசி) நிறுவனத்தில் அசிஸ்டென்ட் டெக்னீசியன், ஜூனியர் அசிஸ்டென்ட், டெக்னிகல் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 309 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பிரிவு வாரியாக: இந்த 309 பணியிடங்களில் ஜூனியர் டெக்னிகல் அசிஸ்டென்ட்  பணிக்கு 131 இடங்களும், ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு 31 இடங்களும், அசிஸ்டென்ட் டெக்னீசியன் பணிக்கு 79 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய இடங்கள் வேறு பிரிவுகளில் உள்ளன.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பணிகளுக்கு மட்டும் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் குறிப்பிட்ட தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவர்கள், ஐடிஐ படித்தவர்கள், டிப்ளமோ இன்ஜினியர்கள், பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு குறிப்பிட்ட பணியிடங்கள் உண்டு. அந்தந்த பணிக்குரிய கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை விளம்பர அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி  27. மேலும் விவரங்களுக்கு https://ongcindia.com என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

Also watch
First published: January 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading