எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ONGC) அதிகாரம் சாரா (Non-Executive Officer) பதவிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலிப்பணியிடங்கள்: 992
பதவியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது, நிர்வாக காரணங்களால் அதிகரிக்கவோ, குறையவோ கூடும்.
சென்னை மற்றும் புதுச்சேரியில் 38 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு:
Drilling/Cementing/Production - Drilling தவர இதர F1 மற்றும் A1 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 28.05.2022 அன்று 30-க்கு கீழ் இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும். W1 நிலை பதவிகளுக்கு வயது வரம்பு 18-27 ஆகா இருக்க வேண்டும். இளநிலை கனரக வாகன இயந்திர செய்குநர் பதவிக்கு வயது வரம்பு 18-35 ஆக இருக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
கல்வித் தகுதி: இளநிலை பொறியாளர் (உதவி) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 3 ஆண்டு பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இளநிலை டெக்னிசியன் ஆகிய பணியடங்களுக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் துறை சார்ந்த திறன் சான்றிதழ் (Trade Certificate) பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலமாக 28.05.2022 இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை அறிவதற்கான இணையதளம் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/76282/Instruction.html
சம்பளம் மற்றும் இதர படிகள்:
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.300ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை.
கணினி சார்ந்த பொது அறிவித் தேர்வு மற்றும் இன்னும் பிற நிபந்தனைகள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார்செய்யப்படும்.
முழு விபரங்களை தெரிந்து கொள்ள
இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்
விண்ணப்பிக்க
INSTRUCTIONS FOR SUBMISSION OF ON-LINE APPLICATIONஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.