Home /News /employment /

தொழில் முனைவோர்க்கு சென்னையில் சிறப்பு முகாம்

தொழில் முனைவோர்க்கு சென்னையில் சிறப்பு முகாம்

தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

தொழிலை தெரிவுசெய்து எப்படி, தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் (Entrpenurship Development and innovation Institute) தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் வரும் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது.

    சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;

    தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் வரும் 17ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.

    முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவுசெய்து எப்படி, தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

    அடுத்த கட்டமானது 3 நாள் பயிற்சியாக நடைபெறும். திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

    இதையும் வாசிக்கஅடுத்து எந்த அரசு வேலைக்கு தயாராகலாம்? முழு விவரம் உள்ளே

    மேலும், மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது, இப்பயிற்சி மூகம் நிதி உதவி பெறும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். எனவே, அரசு திட்டங்கள் குறித்த விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தித் தரப்படும்" என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Entrepreneurship, Jobs

    அடுத்த செய்தி