சவுதியில் செவிலியர்களுக்கு வேலை: ஊதியம் ரூ.90,000!

news18
Updated: October 10, 2018, 9:39 PM IST
சவுதியில் செவிலியர்களுக்கு வேலை: ஊதியம் ரூ.90,000!
news18
Updated: October 10, 2018, 9:39 PM IST
சவுதி அரேபியாவில் ரூ. 90,000/- ஊதியத்தில் செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக சென்னையிலுள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபிய நாட்டின், ரியாத் நகரிலுள்ள கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (King Saud Medical City) மருத்துவமனையில் பணிபுரிவதற்கு மூன்று வருட பணி அனுபவத்துடன் 34 வயதிற்குட்பட்ட பி.எஸ்.சி/எம்.எஸ்.சி/பி.எச்.டி தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு 28.10.2018 முதல் 31.10.2018 வரை டெல்லியில் நடைபெற உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் எம்.எஸ்.சி முடித்த செவிலியர்களுக்கு ரூ.90,000/- மற்றும் பி.எஸ்.சி முடித்த செவிலியர்களுக்கு ரூ.80,000/- என அனுபவத்திற்கேற்றவாறு மாத ஊதியமும், இலவச விமான டிக்கெட், உணவு, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை, போக்குவரத்து, 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு மற்றும் சவூதி அரேபிய அமைச்சகத்தின் சட்டத்திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.

எனவே, தகுதியுள்ள செவிலியர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ovemclmohsa2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.10.2018-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு 22505886/22502267/8220634389/ 9566239685 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
First published: October 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...