ஓமன் நாட்டிலுள்ள தனியார் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று தமிழக அரசு நிறுவனமான ஓஎம்சி (அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஓஎம்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஓமன் நாட்டிலுள்ள தனியார் உணவக நிறுவனத்திற்கு ஹோட்டல் நிர்வாகப் படிப்பில் பட்டம் அல்லது டிப்ளமோ அல்லது கைவினைப் பயிற்சியில் தேர்ச்சிபெற்ற கீழ்க்கண்ட பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
குறைந்தபட்சம் இரண்டு வருடம் முதல் ஒன்பது வருடம் வரை பணி அனுபவம் வேண்டும். மாத ஊதியம், உணவுப்படி உள்ளிட்டவை சேர்த்து CHEF PASTRIES-க்கு ரூ.38,000 முதல் ரூ. 57,000 வரையும், BARISTA -க்கு ரூ.34,200 முதல் ரூ.47,500 வரையும், KITCHEN HELPER-க்கு ரூ.24,700 முதல் ரூ.32,300 வரையும், WAITERS-க்கு ரூ.21,850 முதல் ரூ. 28,500 வரையும், STORE KEEPER & CASHIER–க்கு ரூ 21,850 முதல் ரூ. 39,000 வரையும் மற்றும் FLOWERIST-க்கு ரூ.17,100 முதல் ரூ.32,300 வரையும் வழங்கப்படும். வயது 22 முதல் 32 வரை இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு திறமைக்கேற்றவாறு இலவச இருப்பிடம், விமான பயணச் சீட்டு, மருத்துவம் மற்றும் காப்பீட்டுத் திட்டம் போன்ற சலுகைகள் ஓமன் நாட்டின் சட்ட திட்டத்திற்கு ஏற்றவாறு வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு உரிய தகுதி மற்றும் விருப்பமிருப்பின், சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omceq91@gmail.com என்ற ஈமெயில் வாயிலாக 8.11.2018-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்கள் அறிய 044-22505886/22500417/8220634389/ 9566239685 என்ற தொலைபேசி எண்களுக்கு அழைத்து அறிந்து கொள்ளலாம்.
Also watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Abroad jobs, Job Vacancy, Recruitment