• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : 90,000/- வரை சம்பளம் ... ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Job Alert : 90,000/- வரை சம்பளம் ... ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆயில் இந்தியா லிமிடெட் வேலை

ஆயில் இந்தியா லிமிடெட் வேலை

ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited)நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Junior Assistant (Clerk-cum Computer Operator) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • Share this:
    ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited) (OIL) நிலத்தடி பெட்ரோலியப் பொருட்களை அகழ்ந்து எடுக்கும் இந்திய அரசின் இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும்.இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தின் தலைமையகம் அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள துலியஜான் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் செயல் அலுவலகம் நொய்டாவில் உள்ளது.

    ஆயில் இந்தியா நிறுவனம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும் இடங்களை அறிந்து அகழ்வது, கச்சா எண்ணெயை சுத்திகரிப்பது, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் திரவ பெட்ரோலிய வாயுவை உற்பத்தி செய்தல் இதன் முக்கியப் பணியாகும். இந்நிறுவனத்த்தின் பங்குகள், இந்தியப் பங்குச் சந்தைகளில் விற்பனையாகிறது.

    இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Junior Assistant (Clerk-cum Computer Operator) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    தேர்வு செயல்முறை :

    இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி அடிப்படையிலான சோதனை (CBT), ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

    கட்டண முறை :

    இந்த தேர்விற்கான கட்டண முறை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்

    விண்ணப்ப கட்டணம் :

    • மத்திய அரசு விதிமுறைகளின்படி விண்ணப்பக் கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது!

    • பொது/ஓபிசி பிரிவினருக்கு ரூ. 200/- ஜிஎஸ்டி மற்றும் கட்டண நுழைவாயில்/வங்கி கட்டணங்கள் தவிர
      ஆன்லைன் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    • ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் திரும்பப் பெறப்படாது.

    • SC/ST/EWS/முன்னாள் ராணுவ வீரர்கள் ஆன்லைன் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


    ஊதிய விவரம் :

    ஜூனியர் அசிஸ்டென்ட் (Clerk-cum Computer Operator) Grade-III (ஊதிய அளவு ரூ. 26,600.00-90,000.00)

    கல்வித் தகுதி

    40% மதிப்பெண்களுடன் அரசு அங்கீகாரம் பெற்ற வாரியம்/ பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் 10+2 தேர்ச்சி.

    குறைந்தபட்சம் 06 (ஆறு) மாத கால கணினி பயன்பாட்டில் டிப்ளோமா/சான்றிதழ் தேர்ச்சி மற்றும் MS Word, MS Excel, MS PowerPoint போன்றவற்றுடன் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்

    வயது விபரம்

    1. பொதுப்பிரிவு - குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 30 ஆண்டுகள்

    2. எஸ்சி/எஸ்டி - குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 35 ஆண்டுகள்

    3. ஓபிசி (Non-Creamy Layer) - குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 33 ஆண்டுகள்

    வேலைக்கான விவரங்கள்



































    பணியின் பெயர் Junior Assistant (Clerk-cum Computer Operator)


     

    காலிப்பணியிடங்கள்


    120

    Junior Assistant (Clerk-cum Computer Operator)

    120 [SC: 08, ST: 14, OBC(NCL): 32, EWS: 12, UR: 54]


     

    பணியிடம்
    Dibrugarh, Tinsukia, Sivasagar, Charaideo, Changlang


     

    விண்ணப்பிக்கும் முறை
    Online


     

    தேர்வு செய்யப்படும் முறை
    CBT, Document Verification
    விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2021
    சம்பள விவரம் ரூ.26,600/- ரூ.90,000/-


     

    விண்ணப்ப கட்டணம்
    Others - Rs. 200/-
    SC/ST/PWD/Women - No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் 

    http://register.cbtexams.in/OIL/Recruitment/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://edumedias.s3.ap-south-1.amazonaws.com/OIL/VariousPost/Docs/Online_Advertisement_JAC12021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: