ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.19,500/- சம்பளம்
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.19,500/- சம்பளம்
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்
Oil India Recruitment 2021 : ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஒப்பந்தக் கருவி மேற்பார்வையாளர் மற்றும் ஒப்பந்தக் கருவி தொழில்நுட்ப வல்லுநர் பணிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக கடந்த மாதம் 27.10.2021ம் தேதி அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited) (OIL) நிலத்தடி பெட்ரோலியப் பொருட்களை அகழ்ந்து எடுக்கும் இந்திய அரசின் இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.
இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தின் தலைமையகம் அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள துலியஜான் நகரத்தில் உள்ளது.தற்போது இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள ஒப்பந்தக் கருவி மேற்பார்வையாளர் மற்றும் ஒப்பந்தக் கருவி தொழில்நுட்ப வல்லுநர் பணிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக கடந்த மாதம் 27.10.2021ம் தேதி அறிவிப்பு வெளியானது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் 11.11.2021 & 12.11.2021 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
Oil India Limited
வேலையின் பெயர்
ஒப்பந்தக் கருவி மேற்பார்வையாளர் மற்றும் ஒப்பந்தக் கருவி தொழில்நுட்ப வல்லுநர்
விளம்பர எண்
HRAQ/CONT-WP-B/21-15
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
15 காலிப்பணி இடங்கள்
வயது விவரம்
Contractual Instrumentation Supervisor
குறைந்த பட்சம் 18 , அதிகபட்சம் பொதுப்பிரிவு : 35 வயது , SC/ST: 40 வயது , OBC-NCL: 38 வயது
Contractual Instrumentation Technician
குறைந்த பட்சம் 18 , அதிகபட்சம் பொதுப்பிரிவு : 30வயது , SC/ST: 35 வயது , OBC-NCL: 33 வயது
தேர்வு செய்யப்படும் முறை
Walk-in-Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதி
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பள்ளியில் இருந்து 10th Standard, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்
வேலையின் பெயர்
காலிப்பணி இடங்கள்
சம்பள விவரம்
Contractual Instrumentation Supervisor
05
ரூ.19,500/-
Contractual Instrumentation Technician
10
ரூ.16,640/-
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
27.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி
11.11.2021 & 12.11.2021
விண்ணப்ப முறை
விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.