ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவியாளர் பணி.. விண்ணப்பிப்பது எப்படி?

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவியாளர் பணி.. விண்ணப்பிப்பது எப்படி?

கோவை

கோவை

TN Job alert : கோவை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கீழ் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பொதுப் பிரிவில் அலுவலக உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
அலுவலக உதவியாளர்1

வயது & கல்வித்தகுதி:

இப்பணியிடங்களுக்கு வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி குறிப்பிடப்படவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடத்திற்குத் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வம் உள்ளவர்கள் https://coimbatore.nic.in/என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவத்துடன் கல்வி சான்றிதழ்,சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், புகைப்படம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை போன்றவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணல் போது அசல் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

Also Read : ஐடிஐ முதல் முதுகலை வரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Deputy Director

District Employment and Career Guidance Centre

G.N. Mill Post Coimbatore 641029.

விண்ணப்படிவத்தை பதிவிறக்க செய்ய : விண்ணப்பம்

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 09.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, Tamil Nadu Government Jobs