ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : தமிழக ஊராட்சித் துறையில் வேலை - விண்ணப்பிப்பது எப்படி?

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : தமிழக ஊராட்சித் துறையில் வேலை - விண்ணப்பிப்பது எப்படி?

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

TN job alert : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பழங்குடியினர் பிரிவிற்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் பிரிவிற்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  ஊராட்சி துறை பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்பணியிடம்கல்வித்தகுதிவயதுசம்பளம்
  அலுவலக உதவியாளர்1எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.அதிகபட்சம் வயது 37ரூ.15,700 - 58,100 வரை
  ஈப்பு ஓட்டுநர்1எட்டாம் வகுப்பு தேர்ச்சி, வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம்அதிகபட்சம் வயது 42ரூ.19,500 - 71,900 வரை

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

  Also Read : 8 ஆம் வகுப்பு தேர்ச்சிபோதும்.. தமிழக அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு

  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய https://salem.nic.in/notice_category/recruitment/

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 22.11.2022 மாலை 05.45 வரை.

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்,

  அறை எண் : 210, 2 வது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் - 636 001.

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Tamil Nadu Government Jobs