எஸ்.பி.ஐ வங்கி வேலைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் கோளாறு...! ஓ.பி.சி விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி

காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 13,000 ரூபாய் அடிப்படை ஊதியம் கிடைக்கும். அகவிலைப்படியுடன் சேர்த்து 25,000 ரூபாய் வரை மாத சம்பளம் பெற முடியும்.

news18
Updated: April 26, 2019, 10:47 AM IST
எஸ்.பி.ஐ வங்கி வேலைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் கோளாறு...! ஓ.பி.சி விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி
எஸ்பிஐ
news18
Updated: April 26, 2019, 10:47 AM IST
எஸ்பிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கும் தளத்தில் ஏற்பட்ட கோளாறால் ஓபிசி விண்ணப்பதார்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எஸ்பிஐ வங்கியில் சேவை மற்றும் விற்பனை பிரிவில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் ஓபிசி (இரத பிற்படுத்தப்பட்ட பிரிவினர்) பிரிவினருக்கு வயது வரம்பு 28 என்றும், 3 வருடம் வரை வயது தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், 31 வயதுள்ள ஓபிசி விண்ணப்பதாரர்களால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.


வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் வாடிக்கையாளர்கள் சேவை மற்றும் விற்பனை பிரிவில் எஸ்பிஐ அறிவித்த 11,096 பணியிடங்களால் பட்டதாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தக் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 13,000 ரூபாய் அடிப்படை ஊதியம் கிடைக்கும். அகவிலைப்படியுடன் சேர்த்து 25,000 ரூபாய் வரை மாத சம்பளம் பெற முடியும்.

எஸ்.பி.ஐ வெளியிட்ட வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பில் 2019 ஏப்ரல் 1-ம் தேதி கணக்கின் படி 20 முதல் 28 வயதுள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Loading...

ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வயது தளர்வு உள்ள நிலையில் 1988 ஏப்ரல் 2-ம் தேதி முதல் பிறந்தவர்களை விண்ணப்பிக்க அனுமதி அளித்து இருக்க வேண்டும்.

ஆனால், 1987 ஏப்ரல் 2 முதல் 1988 ஏப்ரல் 1-ம் தேதிக்குள் பிறந்தவர்களால் எஸ்பிஐ வங்கி அறிவித்த இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாமால் போனது.

இதை வைத்துப் பார்க்கும்போது 2 ஆண்டு மட்டுமே வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இதனால், ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் பார்க்க:
First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...